இலவச ஸ்மார்ட்போன் சர்வீஸ்.! தேவையான உதிரிப் பாகங்களும் இலவசம்.!
அனைத்து ஹுவாய் சேவை மையங்களிலும் இலவச ஸ்மார்ட்போன் சர்வீஸ் மற்றும் தேவையான உதிரிப் பாகங்களும் இலவசமாக மாற்றித் தரப்படும் என்று நிறுவும் அறிவித்துள்ளது.
கேரளாவில் பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்குப் பலரும் உதவிக் கரம் நீட்டிவருகின்றனர். இந்த வரிசையில் ஹுவாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது.

அந்த அறிவிப்பின் படி மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பழுதாகிப்போன ஸ்மார்ட்போன்களை ஹூவாய் நிறுவனம் இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் அனைத்து ஹுவாய் சர்வீஸ் மையங்களிலும் இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
அனைத்து ஹுவாய் சேவை மையங்களிலும் இலவச ஸ்மார்ட்போன் சர்வீஸ் மற்றும் தேவையான உதிரிப் பாகங்களும் இலவசமாக மாற்றித் தரப்படும் என்று நிறுவும் அறிவித்துள்ளது. உதிரிப் பாகங்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய தனிப்பட்ட குழுக்களை நியமித்துள்ளதாக ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உங்களின் ஸ்மார்ட்போன்களை உடனே சரி செய்ய ஹூவாயின் இலவச அழைப்பு எண் 1800-209-6555 க்கு தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் நேரடியா சேவை மையங்களுக்கும் சென்று இலவசமாக ஸ்மார்ட்போன்களை சரி செய்து கொள்ளலாம்.
இந்த இலவச சர்வீஸ் சேவை ஆகஸ்டு 31 வரை மட்டுமே கிடைக்கும் என்றும் ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








