இந்திய 5ஜி சோதனை சேவை: சீனா ராணுவத்துடன் உறவு நிறுவனத்துக்கு அனுமதி!
தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள நிறுவனத்துக்கு சீனாவின் ராணுவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவில் 5ஜி சோதனை செய்ய முயற்சிகளில் ஈடுபட சீனா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள நிறுவனத்துக்கு சீனாவின் ராணுவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஹூவாவேய் நிறுவனம்:
சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாவேய்க்கு இந்தியாவில் 5 ஜி சேவையில் சோதனையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலில் அனுமதி மறுப்பு:
இந்தியாவில் 5 ஜி சேவை சோதனை முயற்சிகளில் ஈடுபட ச ஹூவாவேய் நிறுவனத்துக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்வில்லை.

மற்ற நிறுவனங்கள்:
நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொடக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஹூவாவேய் நிறுவனம் எதிர்ப்பு:
அப்போது ஹூவாவேய் நிறுவனம் அழைக்கப்படவில்லை. இதற்கு ஹூவாவேய் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாராட்டு :
5ஜி சேவை சோதனையில் பங்கேற்குமாறு ஹூவாவேய்க்கு தொலைத்தொடர்புத்துறை செயலர் விடுத்துள்ள அழைப்பில், இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் அதன் பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்துடன் உறவு:
சீன ராணுவ தலைமையகத்துடன் ஹூவாவேய்க்கு நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், 5ஜி முறைகளில் பங்கேற்க முடியாத வகையில் அந்நிறுவனத்திற்கு அமெரிக்காவும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications