அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி

|

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள எச்.டி.டி-40 என்ற புதிய வகை பயிற்சி விமானம் தயாரித்தது. இந்த விமானமானது பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டது. இந்த புதியவகை பயிற்சி விமானங்கள் 70 வாங்குவதற்கு முன்னதாகவே ராணுவ அமைச்சகம் எச்.ஏ.எல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம்...

இந்த விமானமான உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. எச்.டி.டி-40 என்ற புதிய வகை பயிற்சி விமானமானது பல கட்ட சோதனைகளுக்கு பிறகு அடுத்தாண்டு விமானம் இயக்குவதற்கான இறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, விமானப்படையில் சேர்க்க உள்ளது.

விமானத்தை ஓட்டி சோதனை செய்த விமானப்படை தளபதி

விமானத்தை ஓட்டி சோதனை செய்த விமானப்படை தளபதி

இந்த நிலையில் இவ்விமானத்தை, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதோரியா இயக்கி சோதித்து பார்த்தார். முன்னதாக தனி விமானி விமானத்தை இயக்குவதாகவும் பதோரியா பின்னாள் அமர்ந்திருப்பதாகவும் திட்டமிடப்பட்டது. விமானத்தில் சென்று வந்ததன் பிறகு விமானத்தை ஆய்வு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

விமானத்தை இயக்குவதில் வல்லுநர்...

விமானத்தை இயக்குவதில் வல்லுநர்...

ஆனால் விமானப்படை தளபதி பதோரியா தாமே இயக்கி சோதிக்க வேண்டும் என அறிவித்து விமானத்தை ஓட்டினார். இவர் முன்னதாக தேஜஸ் ரக போர் விமானங்களை இயக்கி சோதித்து பார்த்ததவர். ஜாக்குவார் ரக விமானத்தை இயக்குவதில் வல்லுநரான பதோரியா, 20க்கும் மேற்பட்ட வகையிலான போர்விமானங்களை இயக்கியுள்ளார்.

விமானத்தின் சிறப்பம்சங்கள்...

விமானத்தின் சிறப்பம்சங்கள்...

எச்டிடி 40 விமானமானது அடிப்படை விங் விமானமாகும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானமானது, விமானப்படை பயிற்சிக்காக தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தில் இரவு நேரத்தில் பயணிக்க முடியாது. இந்த விமானமானது 1000 கி.மீ தூரமும், 450 மைல் வேகத்திலும் பறக்கும். எச்டிடி விமானமானத்தில் டர்போ-ப்ரோப் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

source: @HALHQBLR

Best Mobiles in India

Read more about:
English summary
HTT-40 Flight Made In India Tested By Air Force Commander

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X