எச்டிசி யு11 புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
எச்டிசி யு11 பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்தில் வெளியான எச்டிசி யு11 பொறுத்தவரை பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ.51,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, என எச்டிசி நிறுவனம் தகவல்கல் தெரிவித்துள்ளது.
தற்போது எச்டிசி யு11 நிறுவனம் இணையத்தில் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் இன்று சபையர் ப்ளூ வண்ண விருப்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
எச்டிசி யு11 பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

6ஜிபி ரேம்:
எச்டிசி யு11 பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

அட்ரீனோ 540 :
இந்த ஸ்மார்ட்போனில் அட்ரீனோ 540 கிராபிக்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி,கைரேகை சென்சார், ஐபி67 மதப்பீடு போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications