அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் எச்டிசி யூ11.!
கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆனது 4கே பதிவு ஆதரவுஇ எல்இடி பிளாஷ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. மேலும் முன்பக்கம் 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
தற்சமயம் எச்டிசி நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி எச்டிசி யூ11 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
விலைகுறைக்கப்பட்ட இந்த எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:
எச்டிசி யூ11 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.51,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.5991-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.45,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரில்லா கிளாஸ்:
எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் 5.5 அங்குல க்வாட் எச்டி சூப்பர் எல்சிடி 5 காட்சியை 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் (2560 x 1440 பிக்சல்கள் திரை தீர்மானம்) கொண்டிருக்கிறது.

செயலி:
இது சமீபத்திய குவால்காம் ஸ்னாப் மூலம் இயங்கும் 835 செயலி அட்ரெனோ 540 ஜிபியூ உடனான 2.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்டு இயங்கும். மேலும் ஆணட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:
எச்டிசி யூ11 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்க ஆதரவு,மேலும்
பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா :
கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆனது 4கே பதிவு ஆதரவு, எல்இடி பிளாஷ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. மேலும் முன்பக்கம் 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கலப்பு இரட்டை சிம் ஸ்லாட் (நானோ சிம்) கொண்ட இக்கருவி ப்ளூடூத் 4.2, வைஃபை, என்எப்சி4ஜி, யூஎஸ்பி 3.1 ஜென் 1 டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் / ஏஜிபிஎஸ், க்ளோநாஸ் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் 3000 எம்ஏஎச் பேட்டரித்திரன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications