ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த எச்டிசி யு11

|

சர்வதேச ஸ்மார்ட்போன் பட்டியலில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி எச்.டி.சி. நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. எச்.டி.சி.யின் சமீபத்திய வெளியீடான யு11 ஸ்மார்ட்போன் உலகின் அதிவேக ஸ்மார்ட்போனாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த எச்டிசி

ஐபோன் 7 பிளஸ் வெளியீட்டிற்கு பின் முதல் முறை அதிவேக ஸ்மார்ட்போன் அந்தஸ்தை இழந்துள்ளது. அன்டுடு (AnTuTu)-வின் சர்வதேச ஸ்மார்ட்போன் பட்டியலில் எச்.டி.சி. யு11 ஸ்மார்ட்போன் 180079 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதைத் தொடர்ந்து எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன் 174299 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றுள்ளது. பட்டியலில் சாம்சங் கேலக்ஸி S8 மூன்றாவது இடத்திலும், கேலக்ஸி S8 பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் 3டி நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.

மே 2017, வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் மே மாதம் வெளியாகாத ஒன்பிளஸ் 5 இடம்பெறவில்லை. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் எச்.டி.சி. யு11 முதல் இடம் பிடித்துள்ளது.

முதல் ஐந்து இடங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் 3, லீஇகோ லீ ப்ரோ 3, லீஇகோ லீ மேக்ஸ் 2, அசுஸ் சென்போன் 3 டீலக்ஸ் மற்றும் இசட்டிஇ ஆக்சன் 7 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இடம் பிடித்துள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Antutu has released the list of top ten best performing smartphones in the month of May 2017 and HTC U11 tops the list leaving behind iPhone 7 Plus.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X