குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனை வழங்க எச்டிசி திட்டம்!

By Super
|
குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போனை வழங்க எச்டிசி திட்டம்!

குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்க எச்டிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எச்டிசி ஸ்மார்ட்போன்களிலேயே எக்ஸ்ப்ளோரர் ஸ்மார்ட்போன் குறைந்த விலை கொண்டது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,000 விலையில் பெற முடியும்.

தய்வானீஸ் நிறுவனமான எச்டிசி, எஸ்டி-எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலை கொண்ட சிப்செட்டை உருவாக்க உள்ளது. குறைந்த விலை கொண்ட சிப்செட் என்றாலும் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் அந்த சிப்செட் இருக்கும்.

இந்த குறைந்த விலை கொண்ட சிப்செட்கள், எச்டிசி நிறுவனம் வழங்க இருக்கும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படு்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் எச்டிசி ஸ்மார்ட்போன், சமீபத்தில் சில விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களையும் உருவாக்கி உள்ளது.

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் எச்டிசி நிறுவனத்தின் இந்த திட்டம் பல அரிய ஸ்மார்ட்போன்களை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் கம்மி விலையில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் எச்டிசி வாடிக்கையாளர்களுக்கு, எச்டிசி நிறுவனம் ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்கும் என்று கூறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X