கம்பெனி ரகசியத்தை வெளியிட்ட ஹச்டிசி அதிகாரிகள் கைது!!!

Written By:

ஹச்டிசி நிறுவனத்தின் புரொடெக்ட் டிஸைன் பிரிவுக்கு வைஸ் பிரஸிடென்டாக இருக்கும் சீயன்(chien), டெலெப்மெண்ட் டைரக்டராக இருக்கும் சீயன்-ஹங் (chien-hung) மற்றும் டிஸைன் பிரிவின் சீனயர் மேனேஜர் ஜஸ்டின் ஹாங் (justin-haung) ஆகிய மூன்று பேரும் கம்பெனி ரகசியத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பெனி ரகசியத்தை வெளியிட்ட ஹச்டிசி அதிகாரிகள் கைது!!!

இதில் சீயன் மற்றும் சீயன்-ஹங் ஆகிய இருவரும் இன்னும் ஜெயில் காவலிலேயே உள்ளனர். ஜஸ்டின் ஹாங் மட்டும் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹச்டிசி நிறுவனத்தின் ஷேர்கள் சரிவதற்க்கு இவர்கள் இந்த செயலே முக்கிய காரணம் என தெரிகிறது.

ஹச்டிசி நிறுவனத்தின் டிரேட் ரகசியங்கள் மற்றும் இந்நிறுவனத்தின் புதிய இன்டர்பேஸ் டெக்னாலஜியின் பற்றிய ரகசிய தகவல்களையும் இந்த அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் ரூ. 2,20,57,200 ரூபாய் பணத்தை பொய்யான கமிஷன் கட்டணமாக கோரியதற்க்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹச்டிசி நிறுவனம் விரைவில் தனது ஹச்டிசி மேக்ஸ் ஸ்மார்ட்போனை IFA பெர்லின் விழாவில் வெளியிட உள்ளது. அதற்க்கு முன் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது அந்நிறுவனத்திற்க்கு வருதத்தை அளித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot