ஐபோனை தழுவிய எச்டிசி ஒன் ஏ9 வெளியானது..!!
ஆப்பிள் நிறுவனத்தை சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அப்பட்டமாக காப்பியடிப்பது, சீனாவில் இயங்கி வரும் போலி ஆப்பிள் ஸ்டோர்கள் என பலரும் காப்பயடித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தை இம்முறை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமும் இதே முறையை பின்பற்றுவதாக தெரிகின்றது.
அந்த வரிசையில் இம்முறை எச்டிசி நிறுவனம் ஐபோன் போன்றே காட்சியளிக்கும் புதிய கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஏ9
உலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி ஒன் எ9 கருவியானது பார்க்க ஐபோன் போன்றே இருக்கின்றது.

அறிமுகம்
நேற்று (அக்டோபர் 20 ஆம் தேதி) அறிவிக்கப்பட்ட இந்த கருவியானது இந்தியாவில் ரூ.26,000க்கு விற்பனை செய்யப்படும் என்றும் விற்பனை நவம்பர் மாதம் முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு
இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என்றாலும் அமெரிக்காவில் இந்த கருவிக்கான முன்பதிவு நேற்றே துவங்கிவிட்டது.

சிறப்பம்சங்கள்
எச்டிசி ஒன் ஏ9 கருவியின் சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

டிஸ்ப்ளே
5 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

ரேம்
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியும், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி இரு வித ரேம் கொண்ட மாடல்களில் ஏ9 கிடைக்கின்றது. மேலும் மெமரியை 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்
புதிய எச்டிசி ஒன் ஏ9 கருவியானது 1.5 ஜிகாஹெர்ட்ஸ், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் 64பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 ஆக்டாகோர் பிராசஸர்.

இயங்குதளம்
எச்ட்சி ஸ்கின் சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்ட எச்ட்சி நிறுவனத்தின் முதல் கருவி இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 4 எம்பி அல்ட்ரா பிக்சல் செல்பீ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி
4ஜி எல்டிஈ, 3ஜி, ப்ளூடூத், வை-பை மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கைரேகை ஸ்கேனர், ஏம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்சிமிட்டி சென்சார், கைரோ மற்றும் மேக்னடிக் சென்சார் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேட்டரி
இத்தனை சிறப்பம்சங்களுக்கும் சிறப்பாக சக்தியூட்டும் வகையில் 2150 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முதநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications