இது தான் அடுத்த நெக்சஸ் கருவியா, இணையத்தில் வைரலாகும் அம்சங்கள்.??

Written By:

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நெக்சஸ் கருவிகளை தயாரிக்கும் உரிமையைக் கூகுள் நிறுவனம் எச்டிசி நிறுவனத்திற்கு வழங்கியது. மூன்று மாதங்களுக்கு முன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது அனைவரும் அறிந்ததே. எச்டிசி நிறுவனம் நெக்சஸ் கருவிகளை தயாரிப்பது முதல் முறை கிடையாது.

நெக்சஸ் ஒன் மற்றும் நெக்சஸ் 9 போன்ற கருவிகளை எச்டிசி நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் எச்டிசி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென நிலையான இடத்தைப் பிடித்து கொள்ள ஏதுவாக இந்த வாய்ப்பு அமையும்.

அதன் படி எச்டிசி நிறுவனம் தயாரித்து வரும் புதிய நெக்சஸ் கருவி குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மார்லின்

மார்லின்

நெக்சஸ் 6P கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது இருக்கும் என்றும் இந்தக் கருவி நெக்சஸ் மார்லின் என அழைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

எச்டிசி மார்லின் கருவியில் 5.5 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படலாம்.

பிராசஸர்

பிராசஸர்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 820/821/823 பிராசஸர் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மென்பொருள்

மென்பொருள்

எச்டிசி மார்லின் 4ஜிபி ரேம், 32 / 128 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கலாம், மெமரியை நீட்டிக்கும் வசதி இல்லை. இந்தக் கருவியானது புதிய ஆண்ட்ராய்டு பதிப்பான நௌக்கட் கொண்டிருக்கலாம்.

கேமரா

கேமரா

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் மார்லின் கருவியில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

பேட்டரி

பேட்டரி

எச்டிசி மார்லின் கருவியானது 3450 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
HTC Nexus Marlin Leaked Online Rumored Specifications Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot