எச்டிசி டிசையர் 728 இந்தியாவில் வெளியானது..!!
எச்டிசி நிறுவனம் டிசையர் பிரிவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இரு நிறங்களில் வெளியாகும் இந்த கருவியின் விலை இந்தியாவில் ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் திரை, எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாரஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் MT6753 பிராசஸர், 2 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் மோஷன் ஜி சென்சார், காம்பாஸ் சென்சார், ப்ராக்ஸிமிட்டி மற்றும் ஏம்பியன்ட் லைட் சென்சார் போன்றவைகளும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்த வரை இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஈ, ப்ளூடூத் 4.1, வை-பை, 5 எம்எம் ஸ்டீரியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி 2.0 போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை பொருத்த வரை 2800 எம்ஏஎச் வழங்கப்பட்டுள்ளதோடு 26 மணி நேரம் 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டியின் போது 21 மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications