அப்போ நாங்க ஓஹோ., இப்போ மீண்டும் வரோம்- அமோக அமைப்புடன் ரூ.13,000 விலைப்பிரிவில் HTC Wildfire E2 Plus!

|

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது வைல்ட்ஃபயர் வரிசையில் சமீபத்திய ஸ்மார்ட்போனாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் வருகிறது.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ்

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ்

எச்டிசி அறிமுகம் செய்யும் எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் சாதனமானது ரஷ்யாவில் அறிமுகமாகிறது. இதன் காட்சி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இன்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் யூனிசோக் டிகர் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் என அழைக்கப்படும் சாதனம் புதிய நுழைவு நிலை சாதனமாக எச்டிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 சாதனத்தின் வாரிசாக இந்த புதிய போன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

புதிய எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் சாதனமான ரஷ்யாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் இதன் விலை தோராயமாக ரூ.13500 என்ற விலைப்பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் சர்வதேச அளவில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் உறுதிப்படுத்தவில்லை. எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது 720×1600 பிக்சல்கள் தீர்மானத்துடன் வரும் என கூறப்படுகிறது. இது 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி

மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் ஆனது ஆக்டோ கோர் யூனிசோக் டிகர் டி610 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கும் என கூறப்படுகிறது.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் சாதனத்தில் இருக்கும் கேமரா வசதிகள் குறித்து பார்க்கையில், இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வசதிக்கென 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

மென்பொருள் அம்சத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதில் ஃபாஸ்ட் சார்ஜ் வசதி இருக்காது எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் முகம் அடையாளம் காணும் வசதியும் உள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த எச்டிசி வைல்ட்ஃபயர் இ2 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது டூயல் சிம் 4ஜி ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் கூடுதலாக 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3

எச்டிசி வைல்ட்ஃபயர் இ3

இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் எச்டிசி இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யாவில் வைல்ட்ஃபயர் இ3 சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 1560 x 720 பிக்சல்கள் கொண்ட 6.51 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்பக விரிவாக்கத்தை கொண்டிருக்கும். இந்த சாதனத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த சாதனத்தின் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியோடு வரும் என கூறப்படுகிறது. எச்டிசி வைல்ட்ஃபயர் இ3 சாதனத்தில் 10 வாட்ஸ் சார்ஜிங் அம்சத்தோடு 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது, கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

எச்டிசி வைல்டுஃபயர் இ3 அம்சங்கள்

எச்டிசி வைல்டுஃபயர் இ3 அம்சங்கள்

எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் ஐபிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எச்டிசி வைல்டுஃபயர் இ3. எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போன் மாடலில் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்சேமிப்பு வசதி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்சேமிப்பு வசதி

இந்த எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். எச்டிசி வைல்டுஃபயர் இ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
HTC Announced its HTC Wildfire E2 plus with 13MP Primary camera, Android 11 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X