ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்ப்ரோகெட் போர்ட்டபிள் பிரின்டர் இந்தியாவில் வெளியானது

எச்பி ஸ்ப்ரோகெட் போர்ட்டபிள் பிரின்டர் இந்தியாவில் வெளியானது

|

ஸ்மார்ட்போன்கள் இன்றைய உலகின் மிகமுக்கிய அம்சமாக மாறிவிட்ட நிலையில், சர்வதேச கணினி மற்றும் பிரின்டிங் வன்பொருள் சார்ந்த நிறுவனமான எச்பி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சாதனம் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்ப்ரோகெட் போர்ட்டபிள் பிரின்டர் இந்தியாவில் வெளி

எச்பி ஸ்ப்ரோகெட் என்ற பெயரில் புதிய பாக்கெட் அளவு கொண்ட பிரின்டர் சாதனத்தை இந்தியாவில் ரூ.8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தை கொண்டு ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை உடனடியாக பிரின்ட்அவுட் எடுக்க முடியும். கையளவு கொண்ட பிரின்டரில் ஸ்மார்ட்போனில் நாம் எடுக்கும் அனைத்து புகைப்படங்களையும் பிரின்ட்அவுட் எடுக்க முடியும்.

இந்த பிரின்டர் சாதனத்தை எவ்வித ஸ்மார்ட்போனுடனும் ப்ளூடூத் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் ஸ்ப்ரோகெட் செயலி மூலம் எளிமையாக இணைக்க முடியும்.

இந்த செயலியை கொண்டு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்களையும் நேரடியாக பிரின்ட் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்ப்ரோகெட் போர்ட்டபிள் பிரின்டர் இந்தியாவில் வெளி

மேலும் இந்த பிரின்டர் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட எச்பி ZINK பேப்பர்களுடன் வருகிறது. அனைத்து விதங்களிலும் எச்பி ஸ்ப்ரோகெட் போட்டோ பிரின்ட்களை மலிவாகவும், எளிமையாகவும் இளைஞர்களுக்கு ஏற்றதாகவும் வழங்குகிறது.

இந்த சாதனம் இக்காலத்து இளைஞர்களுக்காக உருவாக்கபப்ட்டுள்ளது என்றாலும் அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ள நினைவுகளை ஏற்படுத்தும் என எச்பி இந்தியா நிறுவனத்தின் பிரின்டிங் சிஸ்டம் பிரிவு தலைவர் மற்றும் மூத்த இயக்குனர் ராஜ் குமார் ரிஷி தெரிவித்துள்ளார்.

சில கிளிக்களில் வாடிக்கையாளர்கள் தங்களது நினைவுகளை பிரின்ட் செய்ய இந்த ஸ்ப்ரோகெட் வழி செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன்கள் நமது நினைவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து கொள்ள வழி செய்துள்ள போதும், நிஜ புகைப்படங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியே வித்தியாச அனுபவம் எனலாம். ஒருமுறை புகைப்படம் பிரின்ட் செய்யப்பட்டால் அது வாழ்நாள் முழுக்க நினைவலைகளை ஏற்படுத்தும் தன்மை பெற்று விடுகிறது.

செப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!செப்.27 தொடங்கும் சியோமி தீபாவளி சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்.!

எச்பி நிறுவனம் புதிய சாதனத்தில் ZINK தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இவ்வகையான காகிதம் 20 பெட்டிகளுக்கு ரூ.539 மற்றும் 50 பெட்டிகளுக்கு ரூ.1,249 மட்டுமே செலவாகும். முதல்முறை ஸ்ப்ரோகெட் வாங்குவோருக்கு 10ZINK காகிதங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

எச்பி ஸ்ப்ரோகெட் பிரின்டர் அமேசான் இந்தியா தளத்தில் கிடைக்கும் என்றும் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Global PC and printing hardware solutions provider HP has just launched an interesting product for consumers as well smartphone enthusiasts in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X