Home
News

ஹெவி கேமிங்.. வீடியோ எடிட்டிங்.. அசால்ட் பண்ணும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. NVIDIA கிராபிக்ஸ்.. எந்த மாடல்?

கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற ஹேவி வொர்க் லேப்டாப் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காகவே 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, இன்டெல் கோர்-ஐ7 ப்ராஸசர், என்விடியா ஜியிபோர்ஸ் 3050 கிராபிக்ஸ் கார்டு போன்ற அம்சங்களுடன் எச்பி பெவிலியன் பிளஸ் 16 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எச்பி பெவிலியன் பிளஸ் 16 அம்சங்கள் (HP Pavilion Plus 16 Specifications): இந்த லேப்டாப் 16 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) மைக்ரோ-எட்ஜ் (Micro Edge) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அசால்ட் பண்ணும் எச்பி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. NVIDIA கிராபிக்ஸ்!

இதுவொரு லோவ் ப்ளூ லைட் (Low Blue Light), ஆன்டி-கிளார் (Anti-glare) மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) டிஸ்பிளே மாடலாகும். இதில் டியுவி + ஐசேஃப் (TUV + Eyesafe), பிளிக்கர் ப்ரீ (Flicker Free) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கண்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த எச்பி லேப்டாப்பில் இன்டெல் கோர் ஐ7-13700எச் (Intel Core i7-13700H) ப்ராஸசர் மற்றும் இன்டெல் கோர் ஐ5-13500எச் (Intel Core i5-13500H) ப்ராஸசர் மாடல்கள் இருக்கின்றன. அதோடு இன்டெல் ஐரிஸ் எக்ஸ்ஈ கிராபிக்ஸ் (Intel Iris Xe Graphics) மற்றும் 6 ஜிபி என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3050 (NVIDIA GeForce RTX 3050) வருகிறது.

இந்த எச்பி பெவிலியன் பிளஸ் 16 லேப்டாப்பில் டூயல் சேனல் சப்போர்ட் (Dual Channel Support) கொண்ட 16 ஜிபி ரேம் வருகிறது. அதோடு 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. மேலும், எஸ்எஸ்டி (SSD) சப்போர்ட் உள்ளது. இந்த லேப்டாப்பில் பக்காவான இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, தண்டர்போல்ட் 4 (Thunderbolt 4), டைப்-சி (Type-C), டைப்-ஏ (Type-A), ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஏசி ஸ்மார்ட் பின் (AC Smart Pin) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், இன்டல் வை-பை 6ஈ (Intel Wi-Fi 6E), ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) ஆகியவை வருகின்றன.

இந்த லேப்டாப்பில் பி&ஓ (B&O) ஆடியோ சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) மற்றும் எச்பி ஆடியோ பூஸ்ட் (HP Audio Boost) ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ காலிங் சப்போர்ட்டுக்கான 5 எம்பி ஐஆர் கேமரா (IR Camera) வருகிறது. இதுவொரு எச்பி வைடு விஷன் (HP Wide Vision) மாடலாகும்.

இதோடு பிரைவசி ஷட்டர் (Privacy Shutter), நாய்ஸ் ரெடக்சன் (Noise Reduction) மற்றும் டூயல் மைக்ரோபோன்ஸ் (Dual Microphones) வருகிறது. இந்த எச்பி லோப்டாப்பில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 68W 4-செல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 90W/135W ஏசி பவர் அடாப்டர் (AC Power Adapter) வருகிறது.

இந்த லேப்டாப்பில் பேக்லிட் கீபோர்ட் (Backlit Keyboard), எச்பி இமேஜ்பேட் (HP Imagepad) கொடுக்கப்பட்டுள்ளது. என்விடியா ஸ்டூடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1.90 கிலோ எடைக் கொண்டுள்ளது. இந்த எச்பி லேப்டாப் வார்ம் கோல்டு (Warm Gold) மற்றும் நேச்சுரல் சில்வர் (Natural Silver) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் ஆரம்ப விலை ரூ. 1,24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்பி ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ள முடியும். கேமிங், வீடியோ எடிட்டிங், வொர்க் பிரம் ஹோம் போன்ற ஹெவி வொர்க் லேப்டாப் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த எச்பி பெவிலியன் பிளஸ் மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
HP Pavilion Plus 16 With 16GB RAM, Intel Core i7 Processor Launched in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X