கேமிங் பிரியர்களை இனி கையில் பிடிக்க முடியாதே.. 2 புதிய HP Gaming Laptop அறிமுகம்.. என்னென்ன மாடல்கள்?
மிகவும் சக்திவாய்ந்த அம்சங்களுடன் 4 புதிய ஏஐ லேப்டாப்கள் மாடல்களை அறிமுகம் செய்த கையோடு எச்பி நிறுவனம் மேலும் 2 புதிய கேமிங் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. எச்பி நிறுவனம், ஓமன் 16 ஸ்லிம் (Omen 16 Slim) மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஓமன் டிரான்சென்ட் 14 (Omen Transcend 14) ஆகிய கேமிங் லேப்டாப்களை வெளியிட்டுள்ளது.
இவ்விரு லேப்டாப் மாடல்களுமே அதிநவீன இன்டல் ஏரோ லேக் (Intel Arrow Lake) ப்ராசஸர்கள் மற்றும் நிவிடியாவின் புதிய ஆர்டிஎக்ஸ் 50-சீரீஸ் ஜிபியுக்களை கொண்டுள்ளன. ஓமன் 16 ஸ்லிம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஓமன் டிரான்சென்ட் 14 ஆகிய 2 லேப்டாப்களில் முக்கிய அம்சங்கள் என்னென்ன? என்ன விலை? இதோ விவரங்கள்:

ஓமன் 16 ஸ்லிம் லேப்டாப் மாடலில் முக்கிய அம்சங்கள்:
- இது அதன் மெல்லிய வடிவமைப்பால் தனித்து நிற்கிறது. இது ஸ்டாண்டர்ட் ஓமன் 16 மாடலை விட 16% மெலிதானது.
- இன்டல் கோர் அல்ட்ரா 9 285H ப்ராசஸர்
- நிவிடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 5070 ஜிபியு
- 16 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே (240ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்)
- 16ஜிபி முதல் 32ஜிபி DDR5 வரை ரேம்
- 1டிபி PCIe Gen4 SSD ஸ்டோரேஜ்
- யூஎஸ்பி டைப் சி போர்ட்
- மூன்று யூஎஸ்பி ஏ போர்ட்கள்
- எச்டிஎம்ஐ 2.1
- ஈதர்நெட் ஜாக்
- 3.5மிமீ ஆடியோ காம்போ ஜாக்
- வைஃபை 6இ
- ப்ளூடூத் 5.4
புதுப்பிக்கப்பட்ட ஓமன் டிரான்சென்ட் 14 லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்:
- 1.675 கிலோ எடை
- இன்டல் கோர் அல்ட்ரா 9 285H ப்ராசஸர்
- நிவிடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 5070 ஜிபியு
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 14-இன்ச் 3K OLED டிஸ்பிளே
- வைஃபை 7
- ப்ளூடூத் 5.4
- தண்டர்போல்ட் 4
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஓமன் 16 ஸ்லிம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஓமன் டிரான்சென்ட் 14 ஆகிய இரண்டு மாடல்களுமே எச்பி-யின் ஓமன் ஏஐ (Omen AI) உடன் வருகின்றன, இது உகந்த கேமிங் செயல்திறனுக்கான அமைப்புகளை நன்றாக சரிசெய்யும் ஒரு இன்டெலிஜென்ட் அம்சமாகும். எச்பி நிறுவனம் இவ்விரு லேப்டாப்களின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை குறித்த எந்த தகவலையும் பகிரவில்லை.
முன்னரே குறிப்பிட்டபடி எச்பி மிகவும் சமீபத்தில் தான் 4 புதிய ஏஐ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது: அவைகள் 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a), 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i), 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i) மற்றும் 14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i) மாடல்கள் ஆகும்.
இவைகள் என்ன விலைக்கு அறிமுமாகும் செய்யப்பட்டுள்ளன? 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a Price in India) ஆனது இந்தியாவில் ரூ 2,21,723 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது க்ளேஸியர் சில்வர் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i Price in India) இந்தியாவில் ரூ 2,22,456 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i Price in India) இந்தியாவில் ரூ 2,58,989 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்
14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i Price in India) இந்தியாவில் ரூ 2,67,223 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும். இந்த 4 புதிய லேப்டாப் மாடல்களுமே ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும் என்று ஹெச்பி நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








