ஆதார் இன்டகிரேஷன் கொண்ட எச்பி மேட் ஃபார் இந்தியா ப்ரோ 8 டேப்லெட் அறிமுகம்

எச்பி மேட் ஃபார் இந்தியா ப்ரோ 8 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

|

எச்பி இன்க் இந்தியா நிறுவனம் மேட் ஃபார் இந்தியா சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் வசதி கொண்டுள்ள புதிய எச்பி டேப்லெட்கள் ஆதார் இன்டிகிரேஷன் கொண்டு நிதி மேம்பாடு மற்றும் இதர அரசு திட்டங்களை வழங்க பயன்படுத்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் இன்டகிரேஷன் கொண்ட எச்பி மேட் ஃபார் இந்தியா ப்ரோ 8 டேப்லெட் அறிமு

எச்பி ப்ரோ 8 டேப்லெட்கள் இந்திய நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ 8 டேப்லெட் அதிகப்படியான கஸ்டமைஸ் செய்யக்கூடிய அம்சங்கள் - நிதி மேம்பாடு, அரசு சலுகைகள், பொது விநியோக திட்டம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளை அம்சங்களாக வழங்குகிறது.

அடிக்கடி மாறுபடும் இந்திய நிலைக்கு ஏற்ப சாதனங்கள் எச்பியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறை வாடிக்கையாளர்களின் கருத்துக்களை சார்ந்து வடிமைக்ககப்பட்டுள்ளது. இதனால் சூரிய வெளிச்சத்திலும் பயன்படுத்தக் கூடிய திரை, பெரிய பேட்டரி, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் இந்திய மொழிகளை இயக்கும் வசதியும் கொண்டுள்ளது.

ஆதார் இன்டகிரேஷன் கொண்ட எச்பி மேட் ஃபார் இந்தியா ப்ரோ 8 டேப்லெட் அறிமு

இந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை டிஜிட்டல் முறையில் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய டிஜிட்டல் பயணத்தில் நெடுங்கால கூட்டணி வகிக்கும் நிறுவனமாக, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய குடிமக்களின் அன்றாட பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்.

நோக்கியா 8-ஐ ஓரங்கட்டுங்கள் இதோ அசத்தலான நோக்கியா 9 கான்செப்ட்.!நோக்கியா 8-ஐ ஓரங்கட்டுங்கள் இதோ அசத்தலான நோக்கியா 9 கான்செப்ட்.!

மேட் ஃபார் இந்தியா சாதனங்களை கொண்டு வெவ்வேறு மிகப்பெரிய திட்டங்களை நேரடியாக பயன்பெற வழி செய்ய முடியும் என எச்பி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சுமீர் சந்திரா தெரிவித்தார்.

ஆதார் இன்டகிரேஷன் கொண்ட எச்பி மேட் ஃபார் இந்தியா ப்ரோ 8 டேப்லெட் அறிமு

ப்ரோ 8 டேப்லெட்கள் மேட் ஃபார் இந்தியா அம்சங்களில் 15 மணி நேர பேட்டரி பேக்கப் வெவ்வேறு நிலை பயன்பாடுகளில் வழங்குகிறது. இத்துடன் ஆதார் சார்ந்த இன்டிகிரேஷன் வழங்க ஐரிஸ் மற்றும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மேக்னடிக் ஸ்ட்ரிப் ரீடர், பார் தோடி ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்பி ப்ரோ 8 ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம், குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ப்ரோ 8 டேப்லெட் வெவ்வேறு மாடல்களில் கிடைக்கும் நிலையில் இதன் விலை ரூ.18,374 முதல் துவங்குகிறது. சர்வீஸ் மாடலுக்கான சானதமாகவும் இது கிடைக்கிறசு. இவை எச்பியின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை மூலம் வழங்கப்படுகிறது. இத்துடன் 3 வருடங்கள் ஆன்சைட் வாரண்டி மற்றும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளும் கிடைக்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
HP Inc on Tuesday launched a "Made for India" Pro 8 tablet series that would monitor subsidy distribution through Aadhaar authentication.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X