சுழலும் கேமரா: 11 இன்ச் அளவோடு எச்பி டேப்லெட் அறிவிப்பு- விலையும் ஒஸ்தி, அம்சங்களும் ஒஸ்தி!

|

எச்பியின் 11 இன்ச் டேப்லெட் இறுதியாக அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டேப்லெட் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு வர இருந்தது. இந்த எச்பி டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சம் அதன் சுழலும் கேமரா அமைப்பு ஆகும். அதோடு இது இயற்பியல் கைரேகை ஸ்கேனர், இன்டெல் செயலி உள்ளிட்ட பல அம்சங்களோடு வருகிறது.

எச்பி டேப்லெட் அம்சங்கள்

எச்பி டேப்லெட் அம்சங்கள்

எச்பி டேப்லெட் அம்சங்களை பொறுத்தவரை, இது இன்டெல் பென்டியம் சில்வர் என்6000 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 6வாட்ஸ் டிடிபி, நான்கு கோர்கள், 3.3 ஜிகாபெர்ட்ஸ் சிபியூ பூஸ்ட் க்ளாக் வேகம் மற்றும் ஜாஸ்பெர் லேக் 32 இயூ இன்டெல் அல்ட்ரா எச்டி கிராபிக்ஸ் கார்ட் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது ஒற்றை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது சௌகரியமான கீபோர்ட் வசதியோடு வருகிறது. இது விண்டோஸ் 11 ஹோம்-ல் எஸ் பயன்முறையில் இயங்குகிறது.

100% எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்பு

100% எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்பு

முன்புறமாக, டேப்லெட்டில் 2160 x 1440 டிஸ்ப்ளே தெளிவுத்திறன் உடன் வருகிறது. 84.6% டிஸ்ப்ளே டூ உடல் விகித அளவை கொண்டிருக்கிறது. 100% எஸ்ஆர்ஜிபி வண்ண வரம்புடன் 11 இன்ச் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. டேப்லெட் ஆனது இயற்பியல் கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. இணைப்பு ஆதரவுக்கு என டேப்லெட் யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் மற்றும் ஹெட்போன் ஜாக் ஆகிய ஆதரவோடு வருகிறது. கேமரா அமைப்பை பொறுத்தவரை எச்பி டேப்லெட்டில் 13 எம்பி பின்புற கேமரா சென்சார் வசதியோடு வருகிறது. இது சுழல் முறையில் பயன்படுத்தப்படும்.

எச்பி டேப்லெட் விலை மற்றும் அம்சங்கள்

எச்பி டேப்லெட் விலை மற்றும் அம்சங்கள்

எச்பி டேப்லெட் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கையில், எச்பி டேப்லெட் ஆனது தற்போது அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட் ஆனது சுமார் ரூ.37422 என்ற விலை மதிப்பில் கிடைக்கிறது. அதேபோல் கீபோர்ட் துணைக்கருவி உட்பட சாதனங்களுடன் இதன் விலை ரூ.44,921 ஆக இருக்கிறது.

எச்பி டேப்லெட் இந்திய வெளியீடு குறித்த விவரம்

எச்பி டேப்லெட் இந்திய வெளியீடு குறித்த விவரம்

எச்பி டேப்லெட் இந்திய வெளியீடு குறித்து பார்க்கையில், இந்தியாவில் டேப்லெட் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த விவரம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த சாதனம் இந்தியாவிற்கு கொண்டு வரும் பட்சத்தில் சாம்சங், லெனோவா போன்ற பிராண்டுகளின் ப்ரீமியம் ரக டேப்லெட்களுடன் சிறந்த போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த டேப்லெட்டின் பிரத்யேக அம்சம் சுழலும் கேமரா, இன்டெல் செயலி ஆகிய வசதிகளோடு வருகிறது. இது எச்பி டேப்லெட்டுக்கான பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் சிப் வசதியை பயன்படுத்துகிறது.

லேப்டாப் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு

லேப்டாப் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு

எச்பி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தி லேப்டாப் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் குரோம்புக் 11ஏ என்று அழைக்கப்படும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மாடல் பட்ஜெட் விலையில் மாணவர்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 11.6 இன்ச் ஹெச்டி டச் ஸ்கிரீன், மீடியாடெக் எம்டி8183 ஆக்டோ-கோர் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த லேப்டாப் மாடலில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே

11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே

எச்பி குரோம்புக் 11ஏ மாடல் ஆனது 11.6-இன்ச் எச்டி எல்இடி பேக்லிட் டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1366x768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல். இந்த குரோம் புக் குரோம்புக் 11ஏ மாடல் ஆனது இன்டிகோ புளூ நிறத்தில் வாங்க கிடைக்கும். பின்பு பிளிப்கார்ட் தளத்தில் ரூ.21,999-விலை வரம்பில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
HP 11 Inch Tablet Officially Announced with Rotating Camera, Physical Fingerprint Sensor and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X