Home
News

7.25% வட்டி கொடுக்கும் ஏர்டெல் பேங்க், அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டுமா.?

ஏர்டெல் பேமண்ட் பேங்க் மற்றும் அதன் சேவைகள் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவைகள்.

By Muthuraj

முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பண வங்கி உரிமம் ஆனது11 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது உடன் அந்த நிறுவனங்களின் பட்டியலையும் அறிவித்தது. அதை தொடர்ந்து இறுதியாக கடந்த புதன்கிழமை, ஏர்டெல் இந்தியாவின் முதல் லைவ் பேமண்ட் செலுத்தும் முறையை ராஜஸ்தானில் தொடங்கியது.

அந்த வெளியீட்டு பிறகு, இப்போது அது ஏர்டெல் பேமண்ட் பேங்க் லிமிடெட் அல்லது ஏர்டெல் பேங்க் என்று அறியப்பட்டு வருகிறது மற்றும் அதன் மூலம் அடிப்படை மற்றும் வசதியான வங்கி சேவைகள் வரையறைக்குள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த செய்தி ராஜஸ்தான் மக்களுக்கு மத்தியில் உதவி புரியும் வண்ணம் உள்ளதா என்பது தான் இங்கு கேள்வி..? குறிப்பாக தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலையை வைத்து பார்க்கும் போது ஒரு மிகப்பெரிய கேள்வி எழலாம்..? அது ஒருபக்கமிருக்க எப்படி ஒரு ஏர்டெல் பேமண்ட் பேங்க் அக்கவுண்ட்டை திறப்பது..? என்ற உங்களின் கேள்விகளுக்கு பதில், மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கான விளக்கம் அனைத்தும் கொண்ட தொகுப்பே இது.

அக்கவுண்ட் திறக்க எது தேவை.?

அக்கவுண்ட் திறக்க எது தேவை.?

ஆதார் அட்டை கொண்ட எவருமே ஒரு ஏர்டெல் பேமண்ட் பேங்க் அக்கவுண்ட்டை திறக்க முடியும். தவிர, நீங்கள் ஒரு ஏர்டெல் மொபைல் சந்தாதாரர் என்றால் கூட ஒரு கணக்கை திறக்க முடியும்

செயல்முறை

செயல்முறை

முதலில் நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையத்தை கண்டறிய வேண்டும், பின்னர் உங்கள் ஆதார் எண் கொண்டு அங்கு செல்ல வேண்டும். வெளியான அறிக்கையின்படி இந்த அக்கவுண்ட்டை சில நிமிடங்களில் ஒரு ஆட்டோமொபைல் செயல்முறை மூலம் திறக்கப்படும் மற்றும் எந்த காகிதங்கள் சார்ந்த வேலையும் இருக்காது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டெபிட் / கிரெடிட் கார்ட்

டெபிட் / கிரெடிட் கார்ட்

தற்போது வரையிலாக ஏர்டெல் வங்கி எந்தவிதமான ஏடிஎம் /டெபிட் /கிரெடிட் அட்டை வசதியையும் வழங்கவில்லை. மக்கள் வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் மற்றும் எந்த நியமிக்கப்பட்ட ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு சென்றும் பணம் எடுத்துக் கொள்ள முடியும்

அக்கவுண்ட் பேலன்ஸ்

அக்கவுண்ட் பேலன்ஸ்

அனைத்து வங்கி சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டதால் மக்கள் அவர்களின் மொபைல் போனில் உலா ஏர்டெல் மணி ஆப் மூலம், யுஎஸ்எஸ்டி (*400# ) அல்லது ஐவிஆர் வசதிகள் பயன்படுத்தி தங்கள் அக்கவுண்டில் உள்ள பேலன்ஸைசெய்து கொள்ளலாம். ஒரு முக்கிய சிறப்பம்சமாக, ஏர்டெல் எண்ணில் இருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்படும் பண இடமாற்றங்களுக்கும் எந்த விதமான கட்டணமுமில்லை.

வட்டி

வட்டி

உடன் ஏர்டெல் வங்கி எந்த வட்டியைக் காட்டிலும் உயர்ந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. நிறுவனம் சேமிப்பு கணக்குகள் உள்ள வைப்புக்கு ஒரு ஆண்டு 7.25% வட்டி விகிதம் வழங்கும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏர்டெல் இன்னொரு ரிலையன்ஸ் ஜியோ..!? - புலம்பும் ஏர்டெல் வாசிகள்.!

Best Mobiles in India

English summary
How you Can Open Airtel Payments Bank Account. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X