ஜியோ சிம் கார்ட்டை ஹோம் டெலிவரி மூலம் பெறுவது எப்படி.?
இப்பொழுது நீங்கள் உங்களின் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட்டை ஹோம் டெலிவரி மூலம் பெற முடியும்.
முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் அட்டையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவர்களின் வீட்டிற்கே நேரடியாக வந்து வழங்கப்படும், அதாவது ஹோம் டெலிவரியாக ஜியோ 4ஜி சிம் அட்டை வழங்கப்படும் என்ற அறிக்கைகள் வெளியாகின.
இப்போது அந்த அறிக்கை தான் அதிகம் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது எப்போது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் அட்டை ஹோம் டெலிவரியில் கிடைக்கும் என்பது தான் அந்த விவாதம். ஆரம்ப கட்டத்தில் சில நகரங்களில் ஹாம் டெலிவரி நடத்தப்பட்டது. தெளிவாக ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய வெல்கம் ஆஃபர் மூலம் நேரடியாக அப்போதைய சந்தாதாரர்களை ஈர்க்க சேவை வழங்குநர் மூலம் எடுக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்பட்டது.
ஆனால், இப்பொழுதும் நீங்கள் உங்களின் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட்டை ஹோம் டெலிவரி மூலம் பெற முடியும். அதெப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

க்யூவில் நிற்பதை தவிருங்கள்
இப்போது, ரிலையன்ஸ் சிம் அட்டை ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் மினி கடைகள் என நாடு முழுவதும் கிடைக்கிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தான் மக்கள் தங்கள் கைகளில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் அட்டை ஒன்றை பெற முடிகிறது அந்த அளவிற்கான ஒரு தேவைப்பாட்டில் ஜியோ சேவை உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரகங்களில்
ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டையானது ஒரு சில நகரங்களில் மட்டுமே ஹோம் டெலிவரியாக கிடைக்கப்பெறுகிறது. அது எதிர்காலத்தில் மேலும் பல நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும்.

கிடைக்கிறது
இப்போது, அது கொல்கத்தா, புது தில்லி மற்றும் தேசிய தலைநகரங்கள், மும்பை, அகமதாபாத், மற்றும் புனே ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. நீங்கள் இந்த நகரங்களில் வசிக்கிறார்கள் என்றால், நீங்கள் ஜியோ சிம் கார்டு பெற ரிலையன்ஸ் கடைகளுக்கு செல்ல வேண்டியதில்லை.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுக வேண்டும்
முன்னர் வெளியான செய்திகளின்படி இந்த ஜியோ சிம் ஹோம் டெலிவரியானது ஒரு மோசடி அல்ல. நீங்கள் இதை பெற ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுக வேண்டும். இணையதளத்தில் உங்கள் இடம் சரிபார்க்கப்படும் மற்றும் இந்த சேவை கிடைக்க உங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் கேட்கப்படும்.

பரிசோதனை
நீங்கள் கேட்கப்படும் விவரங்களை ஒருமுறை அளித்தபின்னர் ஜியோ அணி ஒன்று உங்கள் விலாசத்திற்கு வருகை தந்து நேரடி பரிசோதனை நிகழ்த்தும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உடனடியாக நிகழ்த்தப்படும்
அப்போது சரிபார்ப்புகள் நிகழ்த்தப்பட்டு உங்கள் ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்படும், பின்னர் உங்கள் பிங்கர் பிரிண்ட் சரிபார்ப்பும் நிகழ்த்தப்படும். இந்த செயல்முறைகள் நேரம் வீணடிக்கப்படாமல் உடனடியாக நிகழ்த்தப்படும்.

செயல்படுத்தப்படுகிறது
அவ்வளவுதான்.! சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால் உங்கள் ஜியோ 4ஜி சிம் கைகளில் கிடைக்கப்பெறும் மற்றும் அது ஒரு சில மணி நேரங்களில் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இலவச மற்றும் வரம்பற்ற தரவு, குரல் அழைப்புகள் போன்றவைகளை வெல்கம் ஆஃபரின் கீழ் அனுபவிக்க முடியும்.

மேலும் படிக்க
மெல்ல மெல்ல தொடங்கி ஒட்டுமொத்தமாக கிழியும் ஜியோ முகமூடி.!


Click it and Unblock the Notifications








