சிம் அப்கிரேட் செய்வதின் மூலம் இலவச 2ஜிபி ஐடியா 4ஜி தரவு பெறுவது எப்படி.?
புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் வியாபார போட்டியில் ஐடியா நிறுவனம் இப்போது வாடிக்கையாளர்கள் தங்களின் சிம் அட்டையை மேம்படுத்துவதின் மூலம் இலவசமாக 4ஜி தரவு பெறலாம்.
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து தொலைத்தொடர்பு துறையில் ஒருபக்கம் 'வெப்பம்' அதிகரித்துக் கொண்டே போக, மறுபக்கம் பல சலுகைகள், மலிவான கட்டண சேவைகள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
அப்படியாக ஐடியா நிறுவனம் இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் அட்டை மேம்படுத்துவதின் மூலமாக பயனர்கள் 2ஜிபி அளவிலான இலவச 4ஜி தரவை பெற முடியும். அதை நிகழ்த்துவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.
முன்னதாக இந்நிறுவனம் 3ஜியில் இருந்து 4ஜி சேவைக்கு தங்கள் சிம் அட்டைகளை மேம்படுத்தும் பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை இலவசமாக வழங்கியது. ஆனால் அந்த சலுகையயானது அந்த நேரத்தில் சில 4ஜி வட்டங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 4ஜி வட்டாரங்களிலும் இலவச டேட்டாவை ஐடியா வழங்குகிறது.

வழிமுறை #01
முதல் படியாக நீங்கள் இந்த குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்வதின் மூலம் ஒரு புதிய 4ஜி சிம் கார்டு தனை விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து மேலும் தொடரவும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02
இப்போது இணையதளம் உங்கள் வட்டாரத்தின் கீழ் உங்கள் சிம் அட்டை 4ஜி அப்கிரேட் நிகழ்த்த தகுதியானதா இல்லையா என்பது என்ற சரிபார்ப்பை நிகழ்த்தும்.

வழிமுறை #03
சரி பார்ப்புகள் நிகழ்த்தப்பட்ட பின்பு உங்கள் பின் கோடு உடன் உங்களின் முழு விலாசத்தையும் அளித்து உங்கள் 4ஜி சிம் கார்ட்காக காத்திருக்கவும்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04
மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், ஒரு ஐடியா பிரதிநிதி உங்களை அழைத்து உங்கள் விவரங்களை சரிப்பார்ப்பார் பின்னர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டதும் அவர் சிம் அட்டையை உங்களிடம் சமர்ப்பிக்க உங்கள் வீட்டிற்க்கு வருவார்.

வழிமுறை #05
உங்களுக்கு சிம் அட்டை கிடைத்த பிறகு, அது ஆக்டிவேஷன் ஆக 24 மணி நேரம் முதல் 48 நேரம் ஆகும் பின்னர் ஐடியா வழங்கும் இலவச விளம்பர வாய்ப்பானது உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
100 சதவீதம் கேஷ்பேக், ரூ.11,000 மதிப்புள்ள இலவசங்கள், இது தீபாவளி சலுகை!!


Click it and Unblock the Notifications