Home
News

Vodafone Idea..இனி நீ விலை ஏத்துனா என்ன.. ஏத்தலனா என்ன?

அவன் விலை ஏத்திட்டான்.. இவனும் விலை ஏத்திட்டான்.. அப்போ நானும் விலை ஏத்துறேன் என்கிற பாணியில், விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டண விலை உயர்வை அறிவித்ததெல்லாம் சரி தான். ஆனால் "மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்துட்டோமே" என்கிற படியாக.. ஜியோவும், ஏர்டெல்லும் 5ஜி நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துவிட்டன. நாம் 4ஜி சேவையை வைத்து வண்டி ஒட்டுகிறோம் என்பதை வோடாபோன் நிறுவனம் மறந்துவிட்டது போல!

கடந்த பல மாதங்களாக இலவச அன்லிமிடெட் 5ஜி சலுகை (Free Unlimited 5G Offer) என்கிற பெயரின்கீழ் 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களை தன்வசம் ஈர்த்து வைத்து இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்கள் ஆனது.. தத்தம் ரீசார்ஜ் கட்டண விலைகளை உயர்த்தி உள்ளதும்.. எப்போது 5ஜி அறிமுகமாகும் என்றுகூட ஒழுங்காக அறிவிக்காத வோடபோன் ஐடியா நிறுவனமானது தத்தம் ரீசார்ஜ் கட்டண விலைகளை உயர்த்தி உள்ளதும்.. நிச்சயமாக சமம் ஆகாது!

Vodafone Idea..இனி நீ விலை ஏத்துனா என்ன.. ஏத்தலனா என்ன?

ஏனென்றால் மற்ற 2 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட வோடாபோன் ஐடியா நிறுவனமானது "புயல் வேகத்தில்" தனது பயனர்களை / வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அதுவும் ஒருசில மாதங்களாக அல்ல, கடந்த சில வருடங்களாகவே மோசமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய முடியாமலும்.. என்ன செய்தால் சந்தாதாரர் இழப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கண்டுபிடிக்க முடியாமலும்.. திணறி வந்த வோடாபோன் ஐடியா நிறுவனமானது குறைந்தபட்சம் ரீசார்ஜ் கட்டண உயர்வையாவது ஒத்தி வைத்து இருக்கலாம். விஐ இதை செய்யாமல் இருந்திருந்தால்.. இதுவொரு பொன்னான வாய்ப்பாக இருந்திருக்கும்.

Vodafone Idea..இனி நீ விலை ஏத்துனா என்ன.. ஏத்தலனா என்ன?

ஜியோ மற்றும் ஏர்டெல் சேவையின் கீழ் உள்ள 4ஜி வாடிக்கையாளர்கள், பெரிய அளவிலான விலை உயர்வை தாக்குப்பிடிக்க முடியாமல் வோடாபோன் ஐடியாவிற்கு 'ஜம்ப்' அடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கும். இதன்மூலம் நல்ல எண்ணிக்கையிலான புதிய சந்தாதாரரர்களை சேர்க்கும் வாய்ப்பு வோடாபோன் ஐடியாவிற்கு கிடைத்திருக்கும்.

ஆனால் விஐ அதையும் செய்யவில்லை. இந்த நடவடிக்கை மோசமான பின்விளைவுகளை கொண்டுவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏற்கனவே சரியான கவரேஜ் இல்லாத காரணத்தால்.. மோசமான நெட்வொர்க் அனுபவத்தினால்.. விஐ வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலைப்பாட்டில் விலை உயர்வை அறிவித்துள்ள வோடபோன் ஐடியாவின் "கதை" எதுவரை நீடிக்கும் என்பதை நாமே கண்கூட பார்ப்போம் என்று தான் தோன்றுகிறது.

Vodafone Idea..இனி நீ விலை ஏத்துனா என்ன.. ஏத்தலனா என்ன?

நீங்கள் நன்றாக கவனித்தால், ஜியோ நிறுவனமானது வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் உள்ள "லோயர்-எண்ட் யூசர்களை" கைப்பற்ற விரும்புவதை புரிந்துகொள்ள முடியும். ஆகையால் தான் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான ஜியோபார்த் (JioBharat) அல்லது ஜியோபோன் (JioPhone) திட்டங்களின் விலைகளை அதிகரிக்கவே இல்லை.

இதன் அர்த்தம் ஜியோ நிறுவனமானது வோடாபோன் நிறுவனத்தின் கீழ் உள்ள 2ஜி பயனர்களை கவர்ந்திழுக்க விரும்புகின்றன. அறியாதோர்களுக்கு விஐ நெட்வொர்க்குகளில் ஏராளமான 2ஜி பயனர்கள் உள்ளனர். மார்ச் 2023 இல் முடிவடைந்த காலாண்டில், விஐ நிறுவனத்தின் கீழ் 86.3 மில்லியன் 2ஜி பயனர்கள் உள்ளனர். இது இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 40% ஆகும்.

Vodafone Idea..இனி நீ விலை ஏத்துனா என்ன.. ஏத்தலனா என்ன?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்த 2ஜி வாடிக்கையாளர்களை கைப்பற்றி அவர்களுக்கு சிறந்த விருப்பங்கள் மற்றும் நெட்வொர்க் அனுபவத்தை வழங்க விரும்புகிறது. இதுபோன்ற வியாபார யுத்திகள் அல்லது தந்திரங்கள் எதையும் கொண்டில்லாத காரணத்தினால் தான் வோடபோன் ஐடியா "இப்படி ஒரு" பரிதாபமான நிலைக்கு வந்துள்ளது.

தலைக்கு மேல் வெள்ளம் போகும் நேரத்தில்.. உட்புற நெட்வொர்க் கவரேஜை (Indoor Network Coverage) மேம்படுத்துவதற்காக, பல வட்டங்களில் சப்-ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வோடாபோன் ஐடியா நிறுவனம் முதல் முறையாக பெற்றுள்ளது. இது நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கான நெட்வொர்க் அனுபவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தான்.

ஆனால் இதுமட்டுமே ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற 2 ஜாம்பவான்களை எதிர்கொள்ள போதுமானதாக இருக்காது. ஒருவேளை கட்டண உயர்வு அமலுக்கு வந்த பிறகும் கூட, வோடாபோன் ஐடியா தனது பயனர்களுக்கு வழங்கும் மிகவும் மலிவான ரூ.99 திட்டத்தை தொடர்ந்து வழங்கினால்.. ஏதாவது நடக்கலாம். ஆனால் அதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.

வோடாபோன் ஐடியாவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.99 ஆனது மிகவும் கவனிக்கத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.ஏனென்றால் தற்போது வரையிலாக ​​தனியார் தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் மத்தியில் ரூ.99 தான் மிகவும் மலிவான 4ஜி திட்டமாகும். ஜூலை 3 முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வுக்குப் பிறகு, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ரீசார்ஜ் செய்யும் பேஸிக் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை பொறுத்தே அவரரர் தலைவிதி மாற்றி அமைக்கப்படும்!

வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.459 ரீசார்ஜ் ரூ.599 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.269 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.319 ரீசார்ஜ் ரூ.379 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.539 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2899 ரீசார்ஜ் ரூ.3499 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.39 ரீசார்ஜ் ரூ.48 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How Vodafone Idea Recharge Price Hike Will Lead Heavy Lose in Its User Numbers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X