எம்.ஐ. அன்லாக் டூல் மூலம் சியோமி ஸ்மார்ட்போனின் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

ஆனால் தற்சமயம் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லாக் செய்யப்பட்ட பூட்லோடர் வழங்கப்பட்டுள்ளது.

|

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யும் போது பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் கூடுதலாக பயன்படுத்த முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்வது எளிமையான காரியமாகவே இருந்தது. ஒன்றிரண்டு வழிமுறைகளை கொண்டு ஸ்மார்ட்போனினை மிக எளிமைாக ரூட் செய்துவிட முடியும்.

சியோமி போனின் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

ஆனால் தற்சமயம் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லாக் செய்யப்பட்ட பூட்லோடர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூட் செய்யவோ அல்லது கஸ்டம் ரிக்கவரி இன்ஸ்டால் செய்யவோ பயனர்கள் முதலில் பூட்லோடரை அன்லாக் செய்ய வேண்டும்.


சியோமி ஸ்மார்ட்போனில் பூட்லோடரை அன்லாக் செய்யும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

பூட்லோடரை அன்லாக் செய்ய சியோமியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்:

சியோமி ஸ்மார்ட்போனில் பூட்லோடரை அன்லாக் செய்ய சியோமி பூட்லோடர் அன்லாக் வலைதளம் சென்று பயனர் விண்ணப்பிக்க வேண்டும். எம்.ஐ. அன்லாக்கர் வலைதளம் சென்று அன்லாக் நௌ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இனி உங்களின் சியோமி அக்கவுன்ட் லாக்-இன் விவரங்கள் மூலம் வலைதளத்தில் லாக்-இன் செய்து உங்களது கோரிக்கையை சமர்பிக்க வேண்டும். பின் உங்களுக்கு ஒரு குறுந்தகவல் வரும் (இந்த குறுந்தகவல் வருவதற்கு குறைந்த பட்சம் 3 முதல் அதிகபட்சம் 21 நாட்கள்) இந்த குறுந்தகவல் வந்ததும் ஸ்மார்ட்போனினை எந்த நேரத்திலும் அன்லாக் செய்ய முடியும்.

சியோமி போனின் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போனில் இந்த செட்டிங்களை மாற்ற வேண்டும்:
சியோமி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- அபவுட் ஸ்மார்ட்போன் -- பில்டு நம்பர் -- இனி பில்டு நம்பரை ஏழு முறை கிளிக் செய்து டெவலப்பர் ஆப்ஷன்களை எனேபிள் செய்ய வேண்டும்.


செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் சென்று ஓ.இ.எம். அன்லாக் ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.


செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் -- எனேபிள் அன்லாக் பூட்லோடர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இனி செட்டிங்ஸ் -- அடிஷனல் செட்டிங்ஸ் -- டெவலப்பர் ஆப்ஷன்ஸ் -- எனேபிள் யு.எஸ்.பி. டீபக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

சியோமி போனின் பூட்லோடரை அன்லாக் செய்வது எப்படி?

இறுதியில் செய்ய வேண்டியது:

விண்டோஸ் கம்ப்யூட்டரில் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று எம்.ஐ. அன்லாக் டூலை டவுன்லோடு செய்து, எம்.ஐ. அக்கவுன்ட் செயலியில் சைன்-இன் செய்ய வேண்டும்.


ஸ்மார்ட்போனினை ஃபாஸ்ட் பூட் மோடில் வைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போனினை கம்ப்யூட்டருடன் இணைத்து, அன்லாக் செய்ய வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி இருப்பின், உங்களது ஸ்மார்ட்போனில் பூட்லோடர் அன்லாக் செய்யப்பட்டு ஸ்மார்ட்போன் ரீபூட் ஆகும்.

Best Mobiles in India

English summary
How to unlock bootloader on a Xiaomi smartphone with Mi Unlock tool: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X