இலவசம் முதல் 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரை எல்லாவற்றிலுமே குறுக்குவழி.!

புதிய ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோவிற்கு சாதகமான பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.!

|

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல நெறிமுறைப் பிரச்சினைகள் மற்றும் பாரபட்சம் காட்டிய குற்றச்சாட்டுகள் ஆகியவைகள் கடந்த பத்து மாதங்ககளில் பலமுறை வெடித்துள்ளன.

கடந்த ஓராண்டில், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தொழில்துறை மற்றும் நுகர்வோர்களின் செலவு சார்ந்த விடயங்களில் புதிய ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோவிற்கு சாதகமான பல முடிவுகளை எடுத்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அப்படி என்னென்ன சாதகமான முடிவுகளை ட்ராய் நிகழ்த்தியுள்ளது.??

இன்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணங்கள்

இன்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணங்கள்

மிகவும் வியக்கத்தக்க வண்ணம் ட்ராய் அதன் இன்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணங்களை (IUC) ரிலையன்ஸ் ஜியோ அதன் சேவைகளை தொடங்கப்பட்ட (செப்டம்பர் 2016) ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாற்றங்கள் சார்ந்த பரிசீலினையை தொடங்கியுள்ளது

தடையாக இருக்காது

தடையாக இருக்காது

ஆக இந்த மாற்றங்களின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ அதன் இலவச குரல் சேவைகளை வழங்கலாம். அது எந்த விதத்திலும் ஜியோவிற்கு வணிக திட்டத்தை செயல்படுத்த தடையாக இருக்காது.

சந்தேகங்களை கிளப்புகிறது

சந்தேகங்களை கிளப்புகிறது

வணிக பகுப்பாய்வானது, குறைக்கப்பட்ட ஐயூசி கட்டணங்கள் ஆனது புதிய ஆபரேட்டர் ஆன ஜியோவிற்கு மிகவும் உதவும் வண்ணம் உள்ளது என்று குறிக்கிறது. ஒருவேளை அறிமுகத்திற்கு பின்னர் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தால் ட்ராய் ஆதரிக்கக்கூடிய வாதங்களில் ஈடுபடலாம். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பரிசீலனைக்காக செயல்முறை முன்னெடுத்துள்ளது ட்ராய் மீது பெரிய அளவிலான சந்தேகங்களை கிளப்புகிறது.

4ஜி ஸ்பெக்ட்ரம் பரிந்துரைகள்

4ஜி ஸ்பெக்ட்ரம் பரிந்துரைகள்

ட்ராய் ஒழுங்குவிதிகள் ஆனது ஒரு டெலிகாம் ஆபரேட்டர் ஒரு அதிர்வெண் பேண்டில் கிடைக்கப்பெறும் அலைமாலையின் 50%க்கும் மேற்பட்ட ஸ்பெக்டரம்களை குவிக்க முடியாது என்கிறது. 4ஜி பேண்ட்டில் இந்த உச்சவரம்பு 30 மெகா ஹெர்ட்ஸ் என்று உள்ளது. 4ஜி பேண்ட்டில், முதல் ஏலம் 20மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் என்பதால் 4ஜி நிறுவனங்களிடம் ஏற்கனவே 20மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இருந்தது.

அதிக ஸ்பெக்ட்ரம்

அதிக ஸ்பெக்ட்ரம்

ஏற்கனவே 4ஜி கொண்டுள்ள நிறுவனங்கள் ஒருவேளை அதிக ஸ்பெக்ட்ரம் பெற்றால் புதிய ஏலத்தில் 20மெகா ஹெர்ட்ஸ் என்ற வரம்பு 10 மெகாஹெர்ட்ஸ் என்று குறைக்கப்பட வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமோ இந்தியா முழுவதும் 20 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இயக்குபவராக உள்ளது.

ஏலத்தில் பங்கு

ஏலத்தில் பங்கு

இதற்கு காரணம் ட்ராய் 2016-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 20 மெகா ஹெர்ட்ஸ் என்ற வரம்பில் இருந்து 10 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தொகுதி என்று அளவை குறைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஏலத்தில் பங்கேற்க வசதியாய் இருந்துள்ளது ஒருவேளை ட்ராய் 4ஜி ஸ்பெக்ட்ரம் தொகுதி குறைப்பை பரிந்துரைக்காமல் இருந்திருந்தால், ஜியோ ஏலத்தில் பங்குகொண்டிருக்கவே முடியாது.

முன்னரே பதிவு செய்யபட்ட விலை

முன்னரே பதிவு செய்யபட்ட விலை

700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மற்றும் 800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் மிகவும் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது. கடந்த ஏலத்தில், 700மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் வரை விற்பனை இருந்தது. பின்னர் பான்-இந்தியா ஸ்பெக்ட்ரமின் கீழ் அதன் விலை ரூ.55,000 கோடி எண்ரடு ட்ராய் மூலம் ஒரு மிக அதிகமான இருப்பு விலை பரிந்துரைக்கப்படுகிறது.

வழிவகை

வழிவகை

இதன் விளைவாக, அந்த மாபெரும் விலை எந்தவொரு நிறுவனத்தையும் ஏலத்தில் எடுக்க முடியாத நிலை உண்டாக்கியது ஆனால் அம்பானியின் ஜியோ நிறுவனம் அப்படியில்ல. ஆக 800 மெகாஹெர்ட்ஸ் என்ற ஸ்பெக்ட்ரம்தனை ஜியோ மட்டுமே பெறும் வண்ணம் வழிவகை உண்டாக்கப்பட்டுள்ளது.

4ஜி கால்ட்ராப்

4ஜி கால்ட்ராப்

ட்ராய் 2 ஜி மற்றும் 3 ஜி சேவைகளுக்கான கால்ட்ராப் விதிமுறைகளை அமைத்துள்ளது ஒருவேளை அந்த தரத்தை நிறுவனங்களால் வழங்க முடியவில்லை என்றால் ஆபரேட்டர்களுக்கு அபராதங்களை பரிந்துரைக்கிறது.

மோசமான அழைப்பு துண்டிப்பு

மோசமான அழைப்பு துண்டிப்பு

ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த அபராதங்களை பின்னர் ஒதுக்கி அமைத்தது. 4ஜி சேவைகள் வழங்கும் ஜியோ மோசமான அழைப்பு துண்டிப்புகளை அளிக்கும் பட்சத்திலும் எந்தவிதமான அபரங்களுக்குள்ளும் சிக்காமல் இருக்க இது காரணமாய் அமைகிறது.

இணைப்பு புள்ளிகள் அபராதம்

இணைப்பு புள்ளிகள் அபராதம்

ட்ராயின் உள்ளிணைப்புக்கான (POIs) புள்ளிகளை ஜியோவிற்கு வழங்கவில்லை என்பதற்காக மூன்று நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி வரையில் அபராதம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு தொலைத் தொடர்பு வலைப்பின்னலில், இந்த இணைப்பு புள்ளிகள் தான் ஒரு பிணைய அழைப்பில் மற்றொரு பிணையம் மாற அனுமதிக்கும்.

12,000 இணைப்பு புள்ளிகள்

12,000 இணைப்பு புள்ளிகள்

இந்த விடயத்தில் பிற ஆப்பரேட்டர்களிடம் 12,000 இணைப்பு புள்ளிகள் தனக்கு கிடைக்கவில்லை என்று ஜியோ புகார் அளித்ததுமே எந்தவிதமான பதிலும் கிடைக்கும் முன்னரே பிற நிறுவனங்களுக்கு அபராதம் பரிந்துரைக்கப்பபட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
How TRAI decisions in last one year helped new Operator. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X