Home
News

இந்த டிப்ஸ் தெரிஞ்சா ATM கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஈஸி 2 மினிட்ஸ் டிப்ஸ்!

ஏடிஎம் (ATM) கார்டு பயனர்களுக்கு ஒரு அட்டகாசமான புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி ATM இயந்திரங்களில் இருந்து ரொக்கமாக பணம் எடுக்க ATM கார்டு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுப்பதென்று பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் உள்ள மெட்ரோபொலிட்டன் சிட்டி மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் ATM சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. ATM மையங்களில் இருந்து பணத்தை வித்ட்ரா செய்ய ஏடிஎம் கார்டு கட்டாயமானது. இனி இந்த விதி எல்லாம் மலையேறப் போகிறது.

இந்த டிப்ஸ் தெரிஞ்சா ATM கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்!

காரணம், இனி இந்திய மக்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் கார்டுலெஸ் முறையில் ATM இயந்திரங்களில் இருந்து எளிமையான பணம் எடுக்கலாம். அதாவது, ஏடிஎம் கார்டு இல்லாமல் QR குறியீடை மட்டும் ஸ்கேன் செய்து இனி ATM இயந்திரங்களில் இருந்து பணம் வித்ட்ரா செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரண்டு வங்கிகளும் இப்போது இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளன. அதேபோல், நீங்கள் எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், கார்ட்லெஸ் கேஷ் வித்டிராவல் அம்சம் இயக்கப்பட்டிருக்கும் ATM மூலம், UPI QR Cash என்ற அம்சத்தைப் பயன்படுத்தி இனி ஈசியாக பணம் எடுக்கலாம்.

சரி, முதலில் கார்டு இல்லாமல் ATM-ல் இருந்து பணம் எடுக்க என்னென்ன தேவை என்பதை பார்க்கலாம். UPI சேவை கொண்ட ATM இயந்திரம் தேவை. உங்களிடம் GPay, PhonePe, BHIM போன்ற எதாவது ஒரு UPI அடிப்படையிலான கட்டணப் பயன்பாடும் தேவை. முக்கியமாக இந்த சேவையை பயன்படுத்த உங்களிடம் வேலை செய்யும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் இதோ..

ஸ்டேப் 1: ஏதேனும் ஏடிஎம் இயந்திரத்திற்குச் சென்று, " வித்ட்ரா கேஷ் (Withdraw Cash)" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டேப் 2: ஏடிஎம் இயந்திரத் திரையில் UPI விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

ஸ்டேப் 3: ஏடிஎம் திரையில் உங்களுக்கு QR குறியீடு காட்டப்படும்.

ஸ்டேப் 4: இப்போது, ​​உங்கள் மொபைலில் ஏதேனும் UPI பேமெண்ட் செயலியைத் திறந்து QR ஸ்கேனரை இயக்கவும்.

ஸ்டேப் 5: நீங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், நீங்கள் வித்ட்ரா செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்.

ஸ்டேப் 6: பணத்தை எடுக்க தொடர என்பதைக் கிளிக் செய்து UPI பின்னை உள்ளிடவும்.

இப்போது கார்டு இல்லாமலே ATM மெஷின் உங்களுக்கு நீங்கள் உள்ளிட்ட தொகையை ரொக்கமாக வழங்கும். இந்த முறையை பின்பற்றி இனி மக்கள் எளிமையாக ATM கார்டு இல்லாமல், பணம் எடுக்கலாம். இந்த எளிமையான முறையை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Withdraw Money from ATM Without Using a Debit Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X