Home
News

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ATM கார்டு பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு வசதி இருக்கும் பொழுது ஏன் ATM வாசலில் கூட்டத்தில் நிற்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளது. ATM இயந்திரத்தில் மட்டும் தான் பணம் எடுக்கவேண்டும் என்பதிலை, நீங்கள் 'இதில்' கூட பணம் எடுக்கலாம் என்று புதிய அறிவிப்பை SBI அறிவித்துள்ளது.

நீண்ட வரிசையில் ஏன் காத்திருக்கவேண்டும்?

நீண்ட வரிசையில் ஏன் காத்திருக்கவேண்டும்?

இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான SBI வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ATM மையங்களில் பணம் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தானியங்கி டெபாசிட் இயந்திரமான ADWM இயந்திரத்தை வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது.

ADWM இயந்திரம் பணம் டெபாசிட் செய்ய மட்டும் தானா?

ADWM இயந்திரம் பணம் டெபாசிட் செய்ய மட்டும் தானா?

பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டும் தான் ADWM இயந்திரம் என்று பலரும் தவறாக கருதுகின்றனர். ADWM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறையும் ATM போன்றது தான், டெபிட் கார்டு வைத்துள்ள பயனர்கள் எப்பொழுதும் போல தங்களுடைய கார்டை ATM இயந்திரத்தில் ஸ்வைப் செய்வது போன்றே ADWM இயந்திரத்திலும் ஸ்வைப் செய்து பயன்படுத்தலாம்.

இனி இந்த இயந்திரத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

இனி இந்த இயந்திரத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

பிறகு எப்பொழுதும் போல உங்களுடைய ATM பின் நம்பரை உள்ளிட்டு, உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை ADWM இயந்திரத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு தகவலை SBI வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் "உங்கள் பணத்தை எடுக்க ADWM இயந்திரம் இருக்கும்போது ஏன் ATM வரிசையில் நிற்க வேண்டும்? இனி இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை விரைவாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.

ATM பயனர்கள் ADWM மூலம் பணம் எடுக்கலாம்

ATM பயனர்கள் ADWM மூலம் பணம் எடுக்கலாம்

மேலும் அந்த ட்வீட் உடன் SBI வங்கி, ADWM இயந்திரம் குறித்த 22 வினாடி வீடியோவை பதிவு செய்துள்ளது. இதுவரை, நாம் அனைவரும் இந்த ADWM இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்யப் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இனிமேல் நீங்கள் இந்த ADWM இயந்திரங்களிலிருந்தும் கூட ATM பயனர்கள் பணத்தை விரைவாக எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

13,000-திற்கும் மேற்பட்ட ADWM இயந்திரங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி நாடு முழுவதும் சுமார் 13,000-திற்கும் மேற்பட்ட ADWM இயந்திரங்களை நிறுவியுள்ளது. வங்கிக் கிளைக்கு செல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய உதவி வந்தது, இனி ATM போல் பணம் எடுக்கவும் உதவும் என்று வங்கி கூறியுள்ளது.

ATM மற்றும் ADWM என்ற வித்தியாசமின்றி பணம் எடுக்கலாம்

ATM மற்றும் ADWM என்ற வித்தியாசமின்றி பணம் எடுக்கலாம்

எனவே, அடுத்த முறை நீங்கள் பணத்தை எடுக்க ATM இயந்திரத்தை மட்டுமே நம்பி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, இனிமேல் பணத்தை விரைவாக எடுக்கADWM இயந்திரத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்என்று SBI தெரிவித்துள்ளது. அப்போ, இனிமேல் பணம் எடுக்க ATM மற்றும்ADWM என்ற வித்தியாசமின்றிஇரண்டு வரிசையிலும் மக்கள் பணத்தை எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
How To Withdraw Cash From SBI’s ADWM Instead Of Using ATM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X