Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..

|

ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக நிகழ்வு நேற்று நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து இன்று சியோமி நிறுவனத்தின் அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 15 புதன்கிழமை இன்று நடைபெறும் இந்த நிகழ்வில் சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான சியோமி 11 டி ப்ரோ மற்றும் சியோமி 11 டி சாதனங்கள் இந்த உலகளாவிய அறிமுக நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 11 டி சீரிஸுடன், சியோமி 11 லைட் 5 ஜி என் இ என்ற ஸ்மார்ட்போனின் அறிமுகத்தையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

சியோமியின் அறிமுக நிகழ்வில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

சியோமியின் அறிமுக நிகழ்வில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

கூடுதலாக இந்த சியோமியின் அறிமுக நிகழ்வில் சியோமி தனது 120W ஹைப்பர் சார்ஜ்ஜிங் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய நிகழ்வில் சியோமி ஸ்மார்ட் டிவி க்யூ 1 இ 55 இன்ச் அளவு டிஸ்பிளே மாடல், சியோமி பேண்ட் 6 என்எப்சி மற்றும் ஏஎக்ஸ் 3000 மெஷ் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. நினைவுகூர, சியோமி நிறுவனத்தின் Mi Band 6 இன் NFC இல்லாத மாடல் ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி வெளியீட்டு நிகழ்வை எப்போது மற்றும் எப்படி லைவ் பார்ப்பது?

சியோமி வெளியீட்டு நிகழ்வை எப்போது மற்றும் எப்படி லைவ் பார்ப்பது?

சியோமி வெளியீட்டு நிகழ்வு இரவு 8 மணிக்கு GMT+ நேரத்தின் படி துவங்கிறது. இந்திய நேரத்தின் படி இந்த அறிமுக நிகழ்வு சரியாக இன்று மாலை 5.30 IST இல் தொடங்குகிறது. சியாவோமி இன் நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube, டிவிட்டர் மற்றும் அதன் சமூக கைப்பிடிகளின் மூலமாக லைவ் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் வருகையை Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

பெண்களின் முகங்களை ஆபாச வீடியோக்களில் பதிவிடும் திகிலூட்டும் புதிய AI ஆப்.. உஷார் பெண்களே.!பெண்களின் முகங்களை ஆபாச வீடியோக்களில் பதிவிடும் திகிலூட்டும் புதிய AI ஆப்.. உஷார் பெண்களே.!

சியோமியின் நிகழ்வை இங்கே லைவ் பார்க்கலாம்

சியோமியின் சமீபத்திய டீசர் ஒரு புதிய வைஃபை ரூட்டர் மற்றும் ஒரு ஃபிட்னஸ் பேண்டின் வருகையைக் காட்டுகிறது. சியோமி பேண்ட் 6 என்எப்சி மற்றும் ஏஎக்ஸ் 3000 மெஷ் சிஸ்டம் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க் மூலம் நீங்கள் இந்த சியோமி நிகழ்வை நேரலை காணலாம். இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 11 டி, சியோமி 11 டி ப்ரோ ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படு சிறப்பம்சங்கள்

சியோமி 11 டி, சியோமி 11 டி ப்ரோ ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படு சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro ஆகியவை புதிய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சியோமி 11 டி ப்ரோ விவரக்குறிப்புகள் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை ஆதரிக்கும் என்பதை காட்டுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உடன், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W வரை வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?மரணம் இல்லாத வாழ்க்கையின் வாசலை திறக்க துடிக்கும் ஜெஃப் பெசோஸ்.. வினோதமான முயற்சி.! வெற்றியில் முடியுமா?

வெண்ணிலா சியோமி 11 டி வேரியண்ட்

வெண்ணிலா சியோமி 11 டி வேரியண்ட்

வெண்ணிலா சியோமி 11 டி வேரியண்ட்டைப் பொறுத்தவரை, இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 சிப்செட் ஆல் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை கொண்டுள்ளது. சியோமி 11 டி மற்றும் சியோமி 11 டி ப்ரோ ஆகியவை பஞ்ச் ஹோல் டிஸ்பிளே டிசைனுடன் வரலாம். செங்குத்தாக சீரமைக்கப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கலாம் என்று ரெண்டர் கசிவுகள் தெரிவிக்கின்றன.

என்ன வண்ணங்களில் எதிர்பார்க்கலாம்?

என்ன வண்ணங்களில் எதிர்பார்க்கலாம்?

மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் கிளேஸ்ட்டில் ப்ளூ, கிளேசியர் க்ரெய் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளை அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் பெறும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

சியோமி 11 லைட் 5 ஜி என்இ போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

சியோமி 11 லைட் 5 ஜி என்இ போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

சியோமி 11 லைட் 5 ஜி என்இக்கு மி 11 லைட் 5 ஜி உடன் பல ஒற்றுமைகள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் அதே மூன்று பின்புற கேமரா அமைப்பு, 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே கட் அவுட் வடிவமைப்பு ஆகியவை இடம்பெறுகிறது. இருப்பினும், புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 780 ஜி மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மிஞ்சி உள்ள தகவலை நாம் அறிமுகத்தை மூலம் அறிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Watch Xiaomi 11T And 11T Pro Launch With 11 Lite 5G NE In Global Event Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X