400 லைவ்டிவி சேனல்-செல்போனில் பார்க்கலாம்: பட்டைய கிளப்பும் டாடாஸ்கை.!
டிடிஹெச் நிறுவனத்தின் முன்னணி நிறுவனமாக டாடா ஸ்கை நிறுவனம் இருக்கின்றது. பல்வேறு மலிவான பிளான்களையும் வழங்கி வாடிக்கையாளர்களின் மனவும் கவர்ந்த டிடிஹெச் நிறுவனமாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனம் தற்போது, 400க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை வழங்கி வாடிக்கையாளர்கைகளை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது. இந்த டிவிகளையும் நாம் ஸ்மார்ட் போனிலும் பார்க்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.

மொபைல் வழியாக பார்க்கலாம்
டாடா ஸ்கை மொபைல் பயன்பாட்டு பயனர்கள் தங்களது செட்-டாப் பாக்ஸில் சந்தா செலுத்திய சேனல்களையும் தங்களது செல்போன் மூலம் பார்க்கலாம். கூடுதலாக, OTT உள்ளடக்கத்திற்கான நிறுவனத்தின் வலைதளமான, டாடா ஸ்கை வாட்ச்
இதற்கு சென்று டெக்ஸ் டாப் வழியாகவும் லைவ் டிவியை பார்க்க முடியும்.

சந்தா செலுத்தியிருக்க வேண்டும்
உங்களிடம் ஸ்மார்ட் டிவி இருந்தால், நீங்கள் ஒரு உலாவியை பதிவிறக்கம் செய்து டாடா ஸ்கைவிலிருந்து லைவ் டிவியைப் பார்க்க இந்த வலைத்தளத்தைத் திறக்கலாம். இருப்பினும், மொபைல் பயன்பாடு அல்லது டாடா ஸ்கை வாட்ச் வலைத்தளத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்க உங்கள் கணக்கில் செயலில் சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.

எவ்வாறு சேவையை பெறாலம்
டாடா ஸ்கை வலை பதிப்பு (watch.tatasky.com) எந்த டாடா ஸ்கை சந்தாதாரருக்கும் தங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் டாடா ஸ்கை மூலம் நேரடி தொலைக்காட்சி சேவையை பெற விரும்பினால், இந்த வசதியான தீர்வாகும். டாடா ஸ்கை மொபைல் பயன்பாட்டின் காரணமாக டாடா ஸ்கை வழங்கும் லைவ் டிவி சேனல்கள் ஸ்மார்ட்போனில் எளிதில்
பெறலாம்.

கடவுச் சொல் பெற வேண்டும்
நீங்கள் டாடா ஸ்கை வலைத்தளம் முகப்பு, லைவ் டிவி, ஆன் டிமாண்ட், வாட்ச் லிஸ்ட், மை பாக்ஸ் உள்ளிட்ட ஒரு சில உள்ளிட்ட துணை பிரிவுகள் இருக்கின்றன.
பயனர்கள் உடனடியாக லைக் பயன்பாட்டிற்கு சென்று, மொபைல் எண் வழியாக OTP அல்லது டாடா ஸ்கை உள்நுழைவு கடவுச்சொல்லுடன் இணைந்து உள்நுழைய முடியும்.

கூடுதல் அம்சங்கள்
முகப்பு பிரிவில், சந்தாதாரர்கள் லைவ் ஸ்போர்ட்ஸ், லைவ் நியூஸ், கிட்ஸ் டிவி ஷோக்கள், லைவ் டிவி ஷோக்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் கூடுதலாக பல்வேறு சேவைகளையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications