போகோ சி 31 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

|

போகோ சி 31 இந்தியாவில் இன்று பிற்பகல் 12 மணியளவில் (மதியம்) அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு போகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். போகோ நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனின் சில முக்கிய விபரக்குறிப்புகளை அறிமுகத்திற்கு முன்பாக டீஸ் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போகோ சி 3 வாரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய போகோ சி 31 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

புதிய போகோ சி 31 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்

இந்த புதிய போகோ சி 31 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் 4 ஜிபி ரேம் இணைக்கப்பட்டுள்ளது. போகோ சி 31 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் 2021 பதிப்பின் போது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்பதை நிறுவனம் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.

போகோ சி 31 நேரடி ஒளிபரப்பு விவரங்களை வெளியிடுகிறது

போகோ சி 31 நேரடி ஒளிபரப்பு விவரங்களை வெளியிடுகிறது

குறிப்பிட்டுள்ளபடி, போகோ சி 31 இன்று இந்தியாவில் பகல் 12 மணிக்கு IST (மதியம்) தொடங்கப்படும். வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நீங்கள் இந்த நிகழ்வை நேரலை பார்க்க வீடியோவின் இணைப்பை கீழே இணைத்துள்ளோம். போகோ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையின் போது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேட் டையிங்: பூமி அழிவை நோக்கி நகர்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் உண்மை இது தான்..கிரேட் டையிங்: பூமி அழிவை நோக்கி நகர்கிறதா? விஞ்ஞானிகள் வெளியிட்ட திடுக்கிடும் உண்மை இது தான்..

போகோ சி 31 டீஸ் செய்யப்பட்ட சிறப்பம்சங்கள்

போகோவின் இணையதளத்தில் உள்ள மைக்ரோசைட் படி, போகோ சி 31 மீடியா டெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் மூலம் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும். இது கைரேகை மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் கொண்டிருக்கும். அதன் முன்னோடி ஸ்மார்ட்போன் மாடலான போகோ சி 3 அதே சிப்செட் மற்றும் ராம் கட்டமைப்பால் இயக்கப்பட்டது. இது அக்டோபர் 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. போகோ சி 31 மாடல் போகோ சி 3 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

600,000 கைரேகை சோதனை நடத்தப்பட்டதா

600,000 கைரேகை சோதனை நடத்தப்பட்டதா

மைக்ரோசைட் மூலம் வெளியான தகவலில், போக்கோ சி 31 சந்தை தரத்துடன் ஒப்பிடும்போது 25 சதவிகிதம் நீண்ட ஆயுட்காலம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.5 வருட தினசரி பயன்பாட்டிற்குப் பிறகும் புதியது போல் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. போகோ சி 31 ஸ்மார்ட்போன் 1,000 சார்ஜ் சுழற்சி எண்ணிக்கையைப் பெறும் என்றும் குறிப்பிடுகிறது. நிறுவனத்தின் ட்வீட் Poco பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்த மற்றும் மோசடியை தடுக்க 600,000 கைரேகைகள் சோதனை செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..

விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு

விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு

மைக்ரோசைட்டில் பகிரப்பட்ட படங்களின்படி, போகோ சி 31 செல்ஃபி கேமராவுக்கு வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்சைப் பெறும் என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கேமராக்கள், விலை மற்றும் டிஸ்பிளே தொடர்பான பிற விவரக்குறிப்புகள் இன்னும் பகிரப்படவில்லை. போகோ சி 31 அறிமுகத்திற்கு இன்னும் சிறிது நேரமே உள்ளதால், முழு விபரத்தையும் உங்களுக்கு விரைவில் அப்டேட் செய்கிறோம். ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளுக்கு எண்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
How To Watch Poco C31 Launch Live Event In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X