OnePlus Summer Launch Event-ல் புது போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ் அறிமுகம்.. LIVE விவரங்கள்!
இன்று (ஜூலை 16) மாலை நடக்கும் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் நிகழ்வில் (OnePlus Summer Launch Event) என்னென்ன புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும் என்பதில் யாருக்குமே எந்த குழப்பமும் இல்லை. இந்நிகழ்வின் போது ஒரு ஸ்மார்ட்போன், ஒரு டேப்லெட், ஒரு இயர்பட்ஸ் மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் என மொத்தம் 4 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன தயாரிப்புகள்? ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டை லைவ் ஆக பார்ப்பது எப்படி ? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? இத்தாலியில் நடக்கும் ஒன்பிளஸின் இந்த வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்நிகழ்வானது ஒன்பிளஸின் யூட்யூப் சேனல் வழியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஊடக தளங்களின் வழியாகவும் நேரலையில் ஒளிபரப்பப்படும். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு நடத்தும் இரண்டாவது பிஸிக்கல் ஈவென்ட் இதுவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் சம்மர் லான்ச் நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? இந்நிகழ்வின் போது, ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) 5ஜி ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) டேப்லெட், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) இயர்பட்ஸ் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) ஸ்மார்ட் வாட்ச் ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஒன்பிளஸ் நோர்ட் 4-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இது என்ன விலைக்கு வரும் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் தான் இந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் நிகழ்வின் முக்கிய அறிமுகமாக இருக்கும். இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஏஐ ஏரேசர் மற்றும் ஸ்மார்ட் கட்அவுட் போன்ற பல ஏஐ அம்சங்களுடன் அனுப்பப்படும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் ஏஐ பெஸ்ட் ஃபேஸ் மற்றும் ஏஐ க்ளியர் ஃபேஸ் போன்ற கூடுதல் திறன்களும் இதில் சேர்க்கப்படும்.
இதுதவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் 4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு வழங்கிய மிகவும் நீளமான சப்போர்ட் பேக்கேஜ் இதுவாகவும்.
மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது ஒன்பிளஸின் பேட்டரி ஹெல்த் எஞ்சின் தொழில்நுட்பத்துடன் வரும். இது பல ஆண்டுகளாக திறம்பட சார்ஜிங் செய்வதை உறுதிசெய்யும் மற்றும் 1600 முழுமையான சார்ஜிங் சுழற்சிகளுக்காக சான்றளிக்கப்பட்டது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே ஓஎல்இடி டியன்மா யு8 பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை, 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டு இருக்கலாம்.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஆபர் விலை ரூ.27,999 ஆக இருக்கலாம். அநேகமாக இது பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்ககலாம். மேற்க்கூறப்பட்ட விலை வங்கி தள்ளுபடிகளுக்கு பிறகான விலையாக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை சுமார் ரூ.31,999 ஆக இருக்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 உடன் இந்த பிராண்ட் Oஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தும், இது வியர் ஓஎஸ் உடன் இயங்கும் மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச் ஆக இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ இயர்பட்ஸ்களையும் அறிமுகப்படுத்தும்.
கடைசியாக, இந்நிறுவனம், அதன் பிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் 2 மாடலையும் அறிமுகம் செய்யும். இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) மூலம் இயக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12 மாடலில் உள்ள அதே சிப்பை பேக் செய்யலாம். மேற்கண்ட 4 புதிய தயாரிப்புகளை தவிர்த்து, ஒன்பிளஸ் நிறுவனம் சில ஆச்சரியமான அறிவிப்புகளையும் வெளியிடலாம்.


Click it and Unblock the Notifications








