Home
News

Nothing Phone 1 அறிமுக நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி? டைமிங் மிஸ் பண்ணிடாதீங்க!

Carl Pei இன் Nothing என்ற தொழில்நுட்ப பிராண்டானது அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான Nothing Phone 1 டிவைஸை அதிகாரப்பூர்வமாக ஜூலை 12ஆம் தேதி (இன்று) இரவு உலக அளவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் இயர் 1 TWS இயர்பட்களுக்குப் பிறகு இன்று நிறுவனம் அறிமுகப்படுத்தப்படும் அடுத்த புதிய டிவைஸ் இது தான். ஆம், இந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் நத்திங் போன் 1 ஆகும்.

நத்திங் போன் 1 டிவைஸின் அறிமுகம் எப்போது?

நத்திங் போன் 1 டிவைஸின் அறிமுகம் எப்போது?

நத்திங் போன் 1 டிவைஸின் அறிமுகத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே மிஞ்சி உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் நிகழ்வை நாம் இந்தியாவில் எப்படிப் பார்க்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம். OnePlus இன் முன்னாள் இணை நிறுவனரான கார்ல் பெய் என்பவரால் இந்த டிவைஸ் இன்று அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தான் நத்திங் நிறுவனத்திற்குச் சொந்தக்காரரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. நத்திங் ஃபோன் 1 இன் அறிமுகம் நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது என்று பார்க்கலாம்.

நத்திங் நிறுவனத்தின் ''ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)

நத்திங் நிறுவனத்தின் ''ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட் (Return to Instinct)" நிகழ்வு

நத்திங் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை 'ரிட்டர்ன் டு இன்ஸ்டிங்க்ட்' (Return to Instinct)' என்ற விர்ச்சுவல் நிகழ்வின் மூலம் இது நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வு நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மூலம் இன்று இரவு 8:30 லைவ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டிய ஆர்டர் பாஸ் வைத்திருப்பவர்கள் ஜூலை 12 ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை Nothing Phone 1 டிவைஸை ஆன்லைன் மூலம் வாங்க முடியும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு மட்டும் தான் லைவ் பார்க்க முடியுமா?

இங்கு மட்டும் தான் லைவ் பார்க்க முடியுமா?

இருப்பினும், Nothing Phone 1 இன் வெளியீட்டு நிகழ்வை நிறுவனம் அதன் சொந்த இணையதளத்தில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. காரணம், வெளியீட்டு நிகழ்வை ஸ்ட்ரீம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ YouTube இணைப்பு எதுவும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதாவது நிகழ்வை நத்திங்கின் இணையதளத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்று இப்போதைய தகவல் குறிப்பிடுகிறது. வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் பார்க்க விரும்புபவர்கள் https://in.nothing.tech/pages/event இந்த பக்கத்திற்குச் செல்லலாம்.

Nothing Phone 1 ஓபன் சேல்ஸ் விற்பனை எப்போது?

Nothing Phone 1 ஓபன் சேல்ஸ் விற்பனை எப்போது?

சமீபத்தில் வெளியான டிப்ஸ்டர் யோகேஷ் ப்ராரின் கசிவு படி, Nothing Phone 1 ஓபன் சேல்ஸ் விற்பனை மூலம் கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த ஸ்மார்ட்போன் முன்கூட்டிய ஆர்டர் மூலம் இன்விடேஷன் கோட் பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஒரு புதிய கசிவின்படி, இந்தியா மற்றும் ஐரோப்பா உட்பட ஆசியாவின் பல பிராந்தியங்களுக்கு ஓபன் சேல்ஸ் விற்பனை மூலம் ஜூலை 21 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Nothing Phone 1 சிறப்பம்சம்

Nothing Phone 1 சிறப்பம்சம்

வரவிருக்கும் புதிய நத்திங் போன் 1 டிவைஸ் Qualcomm Snapdragon 778G+ சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் உடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் OS உடன் வெளிவரும். Nothing Phone 1 ஸ்மார்ட் டிவைஸ் 120 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் கூடிய 6.55' இன்ச் கூடிய எச்டி டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 MP + 16 MP கொண்ட டூயல் ரியர் கேமரா மற்றும் 16 MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4500 mAh பேட்டரி உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
How To Watch Nothing Phone 1 Launch Event Live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X