இன்னைக்கு நைட் Nothing Ear (Stick) இந்தியாவில் அறிமுகமா? லைவ் பார்ப்பது எப்படி?

|

Nothing என்ற பெயரில் ஒரு பிராண்ட் உலகளவில் இவ்வளவு பிரபலமாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் மாடலான Nothing Phone 1 என்ற மாடலை அறிமுகம் செய்து, உலக மக்களின் கனத்தை ஈர்த்தது.

புதுமையான டிசைன் மற்றும் சிறப்பான திறனுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிராண்ட் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்போது நிறுவனம் Nothing Ear (Stick) சாதனத்தை அறிமுகம் செய்கிறது.

Nothing Ear (Stick) இந்தியாவில் இன்று அறிமுகமா?

Nothing Ear (Stick) இந்தியாவில் இன்று அறிமுகமா?

லண்டனைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இரண்டாவது ஜோடி இயர்பட்ஸ் சாதனத்தை இன்று இந்தியாவில் வெளியிடத் தயாராக உள்ளது.

நத்திங் இயர் ஸ்டிக் என்ற பெயரில் இந்த புதிய டிவைஸ் இன்று இரவு அறிமுகம் செய்யப்படுகிறது.

கார்ல் பை தலைமையிலான நிறுவனம் அதன் வியரபில் ஆடியோ டிவைஸ் (Wearable audio device) பிரிவுகளை விரிவுபடுத்துகிறது.

புதிய Nothing Ear (Stick) vs Nothing Ear (1) டிவைஸ்

புதிய Nothing Ear (Stick) vs Nothing Ear (1) டிவைஸ்

இந்த புதிய இயர்பட்களின் முதல் ஜோடி நத்திங் இயர் (1) (Nothing Ear (1)) கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும், விற்பனை சந்தையில் சாதகமான பதிலைப் பெற்றது.

நத்திங் இயர் (1) இன் வடிவமைப்பு, ஆடியோ தரம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதைத் தொடர்ந்து, இப்போது நிறுவனம் இந்த புதிய Nothing Ear (Stick) சாதனத்தை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

வழக்கத்திற்கு மாறான வழி எதுவும் இதில் இருக்கிறதா?

வழக்கத்திற்கு மாறான வழி எதுவும் இதில் இருக்கிறதா?

Nothing Ear (Stick) இயர்பட்கள் வெளிப்படையான சிலிண்டர் போன்ற கேஸ் உடன் கூட வடிவத்தைக் கொண்டிருப்பதால், இதற்கு முன் எந்த ஆடியோ நிறுவனமும் முயற்சி செய்யாத வகையில், இந்த டிசைன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த முறை வழக்கத்திற்கு மாறான வழியை எதுவும் எடுக்கவில்லை என்றாலும், ஒலி தரத்தின் அடிப்படையில் அது அதன் போட்டியாளர்களை மிஞ்சுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகம் எப்போது நடக்கிறது?

நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகம் எப்போது நடக்கிறது?

நீங்களும் நத்திங் இயர் (ஸ்டிக்) வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வெளியீடு தொடர்பான ஒவ்வொரு தகவலும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நத்திங் இயர் (ஸ்டிக்) வெளியீட்டு நிகழ்வு இந்தியாவில் இரவு 7:30 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் யூடியூப் சேனலில் லைவ் செய்யப்படும்.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

இந்த

இந்த "லிங்க்" ஐ கிளிக் செய்து லைவ் பார்க்கலாம்.!

எனவே, வெளியீட்டை நீங்கள் தவறவிட விரும்பவில்லை என்றால், நத்திங்'ஸ் YouTube சேனலை நீங்கள் இணைக்கலாம்.

நேரடி ஒளிபரப்புக்கான இந்த https://youtu.be/85sq75wqCh4 லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.

நத்திங் இயர் (ஸ்டிக்) இயர்பட்கள் நத்திங் இயர் (1) சான்ஸ் சிலிகான் டிப்ஸைப் போலவே இருக்கும்.

சுவாரஸ்யமாக, சார்ஜிங் கேஸ் உங்களுக்கு லிப்ஸ்டிக்கை நினைவூட்டுகிறது.

நத்திங் இயர் (ஸ்டிக்) என்ன விலையில் எங்கெல்லாம் வாங்க கிடைக்கும்?

நத்திங் இயர் (ஸ்டிக்) என்ன விலையில் எங்கெல்லாம் வாங்க கிடைக்கும்?

மேலும் கேஸைத் திறந்து மூடுவதற்கு லிப்ஸ்டிக் போன்ற ரோல் செய்யக்கூடிய பிரத்தியேக முறையும் இதில் உள்ளது.

விலை நிர்ணயத்தைப் பொறுத்த வரையில், நத்திங் இயர் (1) ஐ விட, நத்திங் இயர் ஸ்டிக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் இயர் (1) ரூ. 5,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், சாதனத்தின் விலை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் இயர் (ஸ்டிக்) Flipkart மற்றும் Amazon உடன் Myntra வழியாக விற்கப்படும்.

Best Mobiles in India

English summary
How To Watch Live Of Nothing Ear (Stick) Launch In India Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X