Home
News

ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு செல்லும் நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது?

கடந்த வாரம், ரிச்சர்ட் பிரான்சன் தனது விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டார். 14 ஆண்டுகளுக்கு முன்பு விர்ஜின் கேலடிக் என்ற பெயரில் நிறுவிய நிறுவனத்தில் இருந்து நியூ மெக்ஸிகோவின் வானத்திலிருந்து சுமார் 50 மைல்களுக்கு மேல் உயரத்தில் பறந்து தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து இன்று பூமியின் மிகப் பெரிய பணக்காரர் ஆனா ஜெஃப் பெசோஸ் இன்று தனது விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினால் உருவாக்கப்பட்ட ராக்கெட்

ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜினால் உருவாக்கப்பட்ட ராக்கெட்

இந்த பிரபஞ்சத்தின் பணக்கார மனிதர் என்று அழைக்கப்படும் ஜெஃப் பெசோஸ், தனது சொந்த ராக்கெட் நிறுவனமான ப்ளூ ஆரிஜினால் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் உள்ள காப்ஸ்யூலுக்குள் நுழைந்து மேற்கு டெக்சாஸிலிருந்து 62 மைல்களுக்கு மேல் உள்ள வானத்தில் இந்த ராக்கெட் பறக்கவிருக்கிறது. இவருடன் இவரின் சகோதரரும் விண்வெளிக்குப் பயணிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்குப் பறப்பதை எப்படி லைவ் பார்ப்பது?

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளிக்குப் பறப்பதை எப்படி லைவ் பார்ப்பது?

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த ராக்கெட் ஏவுதல் கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விண்வெளிக்குப் புறப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ப்ளூ ஆரிஜின் நிறுவனம் அதற்கு முன்பே லைவ் டெலிகாஸ்டை காலை 07:30 மணி முதல் துவங்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனம் தனது யூடியூப் சேனல் வழியாகக் காலை 7:30 மணி முதல் லைவ் செய்யத் தொடங்கும். ஜெஃப் பெசோஸ் பயணிக்கும் இன்றைய தேதி அப்பல்லோ 11 மூன் தரையிறங்கிய 52வது ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போகிறது.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் என்றால் என்ன? அது என்ன செய்யும்?

நியூ ஷெப்பர்ட் ராக்கெட் என்றால் என்ன? அது என்ன செய்யும்?

நியூ ஷெப்பர்ட், ப்ளூ ஆரிஜின் விண்கலம், விண்வெளியில் முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பெயரைத் தொடர்ந்து பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு ராக்கெட் பூஸ்டர் மற்றும் மேல் தளத்தில் ஒரு காப்ஸ்யூலைக் கொண்டுள்ளது. இந்த காப்ஸ்யூலில் தான் விண்வெளிக்குப் பயணிக்கப் போகும் பயணிகள் இருப்பார்கள். விர்ஜின் கேலடிக் விண்வெளி விமானத்தைப் போலல்லாமல், நியூ ஷெப்பர்ட் ஒரு பாரம்பரிய ராக்கெட் ஆகும்.

செங்குத்தாகப் பாயும் அசல் ராக்கெட் இது

செங்குத்தாகப் பாயும் அசல் ராக்கெட் இது

இது செங்குத்தாகப் பாயும் படி உருவாக்கப்பட்டுள்ளது. திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் மூலம் பூஸ்டர் அதன் உந்து சக்தியைப் பயன்படுத்துகிறது. காப்ஸ்யூல் பூஸ்டரிலிருந்து இரண்டு துண்டுகளாகப் பிரிக்கிறது. வானத்தில் 62 மைல் எல்லைக்கு மேலே இது நடைபெறும், பெரும்பாலும் விண்வெளியின் தொடக்கமாக்க இந்த எல்லை கருதப்படுகின்றது. இந்த பயணத்தின் போது, ​​பயணிகள் காப்ஸ்யூலைச் சுற்றி மிதந்து மிதப்பார்கள். பின்னர் நான்கு நிமிடம் விண்வெளி அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

பூமியில் மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கும் ராக்கெட்

பூமியில் மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கும் ராக்கெட்

விண்வெளியில் இருந்து பூமிபை பார்ப்பது, விண்வெளியில் கருமை நிற வெற்றிடத்தைப் பார்ப்பது போன்ற அனுபவங்களை இவர்கள் பார்வையிடுவார்கள். பூஸ்டர் முதலில் செங்குத்தாகத் தரையிறங்கும். இது ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9 ராக்கெட்டுகளின் டச் டவுன்களைப் போன்றது. பூப்ஸ்டருக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு காப்ஸ்யூல் பத்திரமாகத் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு நிகழ்வும் இன்று இந்திய நேரடி 5:00 மணி முதல் துவங்கி லைவ் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
How To Watch Jeff Bezo Blue Origin Rocket Launch Live On Online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X