IND Vs NZ- இறுதி டெஸ்ட் போட்டி நேரலை பார்ப்பது எப்படி?., பந்துக்கு பந்து வர்ணனை!
நேரடி உலக டெஸ்ட் சாம்பியனஷிப் போட்டியை பார்ப்பது எப்படி மற்றும் ஆன்லைனில் பந்து டூ பந்து வர்ணனை கேட்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து டபிள்யூடிசி இறுதி டெஸ்ட் போட்டி லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வழிமுறைகளை காணலாம்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இறுதி லைவ் ஸ்ட்ரீமிங் ஆன்லைனில் பார்ப்பதற்கான வழிமுறைகள், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா நியூசிலாந்து அணி மோதுகிறது. ஆன்லைனில் இந்தியா, நியூசிலாந்து அணி நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் பால் டூ பால் வர்ணனைகளை பெறலாம். இந்தியா Vs நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கிடைக்கும். அதேபோல் லைவ்- ஆக்சனை பார்க்கவும் தங்கள் மொபைலில் ஸ்கோர்கார்ட்களை பெறவும் விரும்பும் ரசிகர்கள் போட்டியை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ப்ளஸ்-ல் ஸ்ட்ரீம் செய்யலாம். அதேபோல் இந்த போட்டியானது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 195 நாடுகளில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழை இடையூறு இன்றி இன்றாவது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த போட்டியின் நேற்றைய முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த இறுதிப்போட்டியானது இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெறுகிறது.

முதல் நாள் போட்டியில் மழை விட்டு விட்டு பெய்ததன் காரணமாக ஆட்டத்தை நிறுத்தி வைப்பதாக நடுவர்கள் அறிவித்தனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டாலும் அசைசமன் செய்யும் வகையில் ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி போட்டியின் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க காரணம், இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பை கிடைக்கும். போட்டி சமன் செய்யப்படும் பட்சத்தில் கோப்பையை இரண்டு அணிகளும் பகிர்ந்து கொள்ளும். மழை குறிக்கீடு இங்கிலாந்து தொடர்ந்து போட்டியை தடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications