இன்னும் 3 நாட்களில் நிகழவிருக்கும் 2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்தியர்கள் நேரில் பார்க்க முடியுமா?

|

Solar Eclipse 2022: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகர்ந்து, பூமியின் மீது நிழலைப் பதித்து, சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு நிகழ்கிறது. சந்திரன் சூரிய வட்டின் ஒரு பகுதியை மட்டும் தடுக்கும் போது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் பார்சியல் சூரிய கிரஹண (partial surya grahan) ஏற்படுகிறது. இந்த வழக்கில், சூரியனின் வட்டு தோராயமாக 64% மறைக்கப்படும் என்று நாசா தகவல் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் மூலம் சூரிய கிரகணம் இன்னும் மூன்று நாட்களில் நிகழவுள்ளது. இதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA), இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் தேதி மற்றும் நேரத்தைப் பற்றிய தகவலை இப்போது அறிவித்துள்ளது. விண்வெளி ஏஜென்சியின் தகவல் படி, இந்த ஆண்டின் முதல் பகுதி சூரிய கிரகணம் ஏப்ரல் கடைசி நாளில் நடக்கும். அதாவது, வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி இந்த சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாகமான சூரிய கிரகணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் இருந்து பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் இந்த சூரிய கிரகண நிகழ்வை மக்கள் பார்க்க முடியும்?

எங்கெல்லாம் இந்த சூரிய கிரகண நிகழ்வை மக்கள் பார்க்க முடியும்?

அதிகாரப்பூர்வ வெளியீட்டில், நாசா கூறியது, "ஏப்ரல் 30 மாலை நேரத்தில் மேற்கு வானத்தில் சூரியன் அஸ்தமிக்கும் போது, ​​சிலி, அர்ஜென்டினா, உருகுவே, மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெருவில் தெளிவான வானம் உள்ளவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தின் பகுதியளவு மறைந்திருக்கும் சூரியனை நேரில் காண வாய்ப்புள்ளது என்று நாசா கூறியுள்ளது. தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதி தெரியவும் வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இது தெரியும்.

கிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்புகிஸ்பாட் கிவ் அவே போட்டி-நீங்கள் லைக் மற்றும் ஷேர் செய்தால் போதும்- இலவசமாக நோக்கியா சி01 பிளஸ் வெல்ல வாய்ப்பு

இந்திய நேரப்படி சூரிய கிரகணம் எந்த நேரத்தில் தோன்றும்?

இந்திய நேரப்படி சூரிய கிரகணம் எந்த நேரத்தில் தோன்றும்?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 12:15 மணிக்குப் பகுதி சூரிய ஒளியில் தொடங்கி மே 1 ஆம் தேதி அதிகாலை 4:07 மணி வரை நீடிக்கும் என்று நாசா கூறியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் என்பதனால் இதைப் பாதுகாப்புடன் நேரில் காண மக்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமா? என்று கூகிளில் அதிகம் சர்ச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விடை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..ஏலியன்களால் ஒரு பெண் கர்ப்பமா? UFO சாட்சிகளுடன் மனிதர்களுக்கு பாலியல் சந்திப்பா? பென்டகன் ஆவணம் சொன்ன உண்மை..

இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியுமா?

இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியுமா?

சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து தெரியுமா, இல்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்பாராதவிதமாக, இம்முறை இந்தியாவில் உலா மக்கள் இந்த பகுதியளவு சூரிய கிரகணத்தை நேரில் காண முடியாது என்பதை நாசா தகவல் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், விண்வெளி ஆர்வலர்களுக்காக இந்த சூரிய கிரகண நிகழ்வு பல ஆன்லைன் இணையதள பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலமாக நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. இந்திய மக்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே இந்த சூரிய கிரகண நிகழ்வைக் கண்டுகளிக்க முடியும்.

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் எடுத்த வீடியோ.. மார்ஸுக்கு இரண்டு நிலவுகளா?செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் ரோவர் எடுத்த வீடியோ.. மார்ஸுக்கு இரண்டு நிலவுகளா?

சூரிய கிரகணத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

சூரிய கிரகணத்தின் போது செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

நாசா அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் ஏப்ரல் 30, 2022 அன்று சூரிய கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பை இயக்கும் என்று அறிவித்துள்ளது. நாசாவின் யூடியூப் சேனல் மூலமாகவும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. சூரிய கிரகணத்தைப் பார்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ற பல விஷயங்களை இந்திய மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதில் குறிப்பாக, இந்தியக் குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி, மக்கள் பெரும்பாலும் சூரிய கிரகணத்தின் போது உணவை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்Gmail இல் கொட்டிக்கிடக்கும் மெயில்களை எப்படி எளிமையாக டெலீட் செய்வது? இது தெரிஞ்சா உங்கள் மெயில் பாக்ஸ் கிளீன்

இந்த ஆண்டில் தோன்றும் அடுத்த சூரிய கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?

இந்த ஆண்டில் தோன்றும் அடுத்த சூரிய கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?

அதேபோல், சூரிய கிரகணத்தின் போது பலர் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். மேலும், வெறும் கண்களால் கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக, மக்கள் கேமரா அல்லது தொலைநோக்கியின் லென்ஸ் மூலம் கிரகணத்தைப் பார்க்கிறார்கள். சூரிய கிரகணத்தைக் காண மக்கள் பாக்ஸ் ப்ரொஜெக்டர்கள் மற்றும் தொலைநோக்கிகளையும் பயன்படுத்துகின்றனர். இதேபோன்ற, மற்றொரு சூரிய கிரகண நிகழ்வு இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நிகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

Best Mobiles in India

English summary
How To Watch First Solar Eclipse Of 2022 On April 30 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X