நீ கலக்கு சித்தப்பு.. ஜூன் 5 - ஜூன் 9 வரை.. ஒட்டுமொத்த டெக் உலகமும் அதகளம்.. Apple-ன் அதிரடி அறிவிப்புகள்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடானது (Worldwide Developers Conference) இன்று முதல், அதாவது ஜூன் 5 (June 5) முதல் தொடங்குகிறது. ஜூன் 9 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? இந்நிகழ்வை இந்தியாவில் உள்ளவர்கள் பார்ப்பது எப்படி? இதோ விவரங்கள்:
டபுள்யூடபிள்யூடிசி 2023 (WWDC 2023) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஆப்பிள் நிகழ்வானது இந்திய நேரப்படி ஜூன் 5 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் (Live Stream) செய்ய, அதாவது ஆன்லைன் (Online) வழியாக நேரடியாக பார்க்க நிறைய வழிகள் உள்ளன.

ஆப்பிளின் இந்த வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃப்ரென்ஸ் ஆனது ஆப்பிள்.காம் (apple.com), ஆப்பிள் டெவலப்பர் ஆப் (Apple Developer app), ஆப்பிள் டிவி ஆப் (Apple TV app) மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் (Apple YouTube Channel) வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும். ஸ்ட்ரீம் முடிந்த பிறகு தேவைக்கேற்ப பிளேபேக்கும் (PlayBack) கிடைக்கும்.
மேலும் ஆப்பிளின் சொந்த ப்ரவுஸர் ஆன சஃபாரி (Safari) அல்லது க்ரோம் (Chrome) போன்ற ப்ரஸசரை பயன்படுத்தி எந்தவொரு மேக், ஐபோன், ஐபாட் அல்லது ஐபாட் டச் ஆகியவற்றின் வழியாக டபுள்யூடபிள்யூடிசி 2023 நிகழ்வின் கீநோட்-ஐயும் (2023 WWDC Keynote)கூட நீங்கள் பார்க்கலாம்.
ஆப்பிள் WWDC 2023 நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வின் போது புதிய மேக்புக் ஏர் (New MacBook Air), மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் ((Mixed Reality or MR Headset) மற்றும் ஆப்பிளின் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் (New Operating System) உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் தயாரிப்புகளை ஆப்பிள் காட்சிப்படுத்த உள்ளது.
குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (Augmented reality) திறன்களை இணைக்கும் எம்ஆர் ஹெட்செட் ஆனது இந்நிகழ்வின் முக்கிய அறிவிப்பாக அல்லது அறிமுகமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை நிர்ணயம் சுமார் 3,000 அமெரிக்க டாலர்களாக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.2.47 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிளாக், ப்ளூ, க்ரே, க்ரீன் மற்றும் பிங்க் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு வண்ணங்களின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எம்ஆர் ஹெட்செட் தவிர, குபெர்டினோவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனமானது மேக்புக் ஏர் மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை 15 இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








