Home
News

Amazon Prime மற்றும் Netflix சந்தா இலவசமாக வேண்டுமா? அப்போ கொஞ்சம் ட்ரிக்-ஆ யோசிங்க மக்களே!

OTT தளங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகிவிட்டன. குறிப்பாக அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) ஆகிய தளங்களையே மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு தளங்களின் கன்டென்டை எப்படி இலவசமாக பார்க்கலாம் என்று தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

OTT தளங்களை மக்கள் ஏன் அதிகமாக பயன்படுத்துகின்றனர்? காரணம், பெரும்பாலான புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள், காமெடி ஷோஸ்கள் என்று அனைத்துமே இப்போது இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் ஒன்றில் தான் வெளிவருகிறது. தியேட்டர் சென்று படம் பார்த்தால், அதிகம் செலவாகிறது என்ற காரணத்தினால், மக்கள் வீடுகளிலேயே OTT மூலம் திரைப்படங்களை பார்த்துவிடுகின்றனர்.

Amazon Prime மற்றும் Netflix சந்தா இலவசமாக வேண்டுமா? ட்ரிக்-ஆ யோசிங்க!

அமேசான் பிரைம் சந்தா வருடாந்திர திட்டமாக வருவதனால், ஒரு முறை சந்தாவை வாங்கினால் போதுமானது. மறுபுறம், நெட்பிளிக்ஸ் மாதாந்திர சந்தாவுடன் வருகிறது. இருப்பினும் 2 தளங்களிலும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சரி, இத்தகைய தளங்களில் உள்ள வீடியோக்களை நம்மால் இலவசமாக அணுக முடியுமா? என்றால் முடியும் என்கிறது ஒரு குழு.

ஆனால், இதை அணுக உங்களுக்கு சில சாமர்த்தியமான முடிவுகள் தேவை என்பதே உண்மையாகும். இன்னும் எளிமையாக புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பது போல சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். நீங்கள் ஜியோ அல்லது ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், உங்களால் இலவசமாக அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் உள்ளடக்கங்களை இலவசமாக அணுக வாய்ப்புள்ளது.

ஜியோவை பொருத்தவரை ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், உங்களால் ஜியோ சினிமா, ஜியோ டிவி, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை இலவசமாக அணுக முடியும். இந்த திட்டத்துடன் 100 ஜிபி டேட்டா, தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடட் வாய்ஸ் காலிங் நன்மை ஆகியவை கிடைக்கிறது. இது ஒரு பேமிலி ஆட் ஆன் திட்டம் என்பதனால், கூடுதலாக இந்த திட்டத்துடன் 3 நபர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Amazon Prime மற்றும் Netflix சந்தா இலவசமாக வேண்டுமா? ட்ரிக்-ஆ யோசிங்க!

ஏர்டெல்லை பொறுத்தவரை ரூ.1199 திட்டம் உங்களுக்கு நெட்பிளிக்ஸ் பேசிக் ப்ளான் உடன், 6 மாத அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இதனுடன் அளிக்கபடுகிறது. இவற்றை தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் 1 வருட இலவச சந்தவுடன் இந்த திட்டம் வருகிறது. இத்துடன் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் வின்க் ப்ரீமியம் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளும் இலவசமாக கிடைக்கிறது.

இந்த திட்டமும் 3 கூடுதல் நபர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. இது மாதத்திற்கு 240ஜிபி டேட்டா மற்றும் 200ஜிபி வரையிலான டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள முதன்மை வாடிக்கையாளருக்கு 150 ஜிபி டேட்டாவும் அதனோடு அத்திட்டத்தில் இணையும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 30 ஜிபி டேட்டாவும் பயன்படுத்தலாம்.

OTT நன்மைகளை இலவசமாக பெற வேண்டுமென்றால், கட்டாயம் நீங்கள் போஸ்ட்பெயிட் பிளான்களை தான் தேர்வு செய்ய வேண்டும். ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டத்தில் நீங்கள் இணையும் பட்சத்தில் ரூ.199 மதிப்பிலான நெட்பிளிக்ஸ் பேசிக் சாந்தா இலவசமாக கிடைக்கிறது. இத்துடன் ரூ.1499 மதிப்பிலான அமேசான் பிரைம் சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. இது தவிர அடிப்படை SMS மற்றும் வாய்ஸ் கால் நன்மையையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
How to watch Amazon Prime and Netflix videos for free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X