Home
News

2024-இல் ஓட்டு போடுறது.. மை வெச்சா போதாது.. டெபாசிட் சிலிப்.. விவிபேட்டில் உஷார்.. இது தெரியாம போகாதீங்க!

தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி? என்ற குழப்பம் புதிய வாக்களர்கள் மட்டுமல்லாமல், பல முறை ஓட்டு போட்ட பழைய வாக்காளர்களுக்குமே ஏற்படுகிறது. அதிலும், 2024-இல் ஏதாவது மாற்றம் வந்துருக்குமோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது. இந்த சந்தேகங்கள், குழப்பங்களுக்கு விடை இதோ.

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைக்கிறது. இதனால், புதிய வாக்களார்கள் முதல் பழைய வாக்களர்கள் வரையில், தங்களது வாக்களாளர் அடையாள அட்டையை புரட்டி பார்ப்பது, பூத் ஸ்லிப் விவரங்களை சரிபார்ப்பது போன்ற வேலைகளில் மும்முரமாக இருக்கின்றனர்.

2024-இல் ஓட்டு போடுறது.. மை வெச்சா போதாது.. டெபாசிட் சிலிப்.. பாருங்க!

ஆனால், சிலர் வாக்குச்சாவடிக்கு செல்வதை பற்றி நினைத்தாலே சற்று பதற்றம் அடைவார்கள். ஏனென்றால், எப்படி ஓட்டு போடுவது (How to Vote) அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பங்களும், சந்தேகங்களும் அவர்களுக்கு இருக்கும். இது பெரிய விஷயமல்ல. உங்களது வாக்குச் சாவடிக்கு புறப்படும்போது, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் (Booth Slip) இரண்டையும் எடுத்து செல்லுங்கள்.

வாக்களர் அடையாள அட்டை (Voter ID Card) இல்லை என்றாலும், ஆதார் (Aadhaar), பேங்க் பாஸ்புக் (Bank Passbook), பாஸ்போர்ட் (Passport), பான் கார்டு (PAN Card) போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ்களை எடுத்து செல்லலாம். வாக்குச் சாவடிக்கு சென்ற பிறகு நிதானமாக வரிசையில் நில்லுங்கள்.

முதலாம் தேர்தல் அதிகாரியிடம் உங்களது பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அல்லது அதற்கு மாற்றாக நீங்கள் கொண்டு சென்றிருக்கும் வேறு அடையாள சான்றிதழை காண்பிக்க வேண்டும். அதை சரிபார்த்த பிறகு அந்த தேர்தல் அதிகாரி உங்களது பெயர், பாகம் எண், வரிசை எண்ணை ஆகியவற்றை உரத்த குரலில் தெரியப்படுத்துவார்.

2024-இல் ஓட்டு போடுறது.. மை வெச்சா போதாது.. டெபாசிட் சிலிப்.. பாருங்க!

இதனை அந்தந்த கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உறுதி செய்து கொள்வார்கள். அதன்பின் 2ஆவது தேர்தல் அதிகாரி உங்களது இடது கையின் ஆள் காட்டி விரலில் மை வைத்து, ஒரு சீட்டை வழங்குவார். அதோடு படிவம் 17ஏ (Form 17A) பதிவேட்டை வழங்குவார். அதில் நீங்கள் கையொப்பம் செய்து விட வேண்டும்.

இப்போது, உங்களுக்கு வழங்கப்பட்ட சீட்டை மூன்றாம் தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்த பிறகு, அவர் அருகில் இருக்கும் ஈவிஎம் எந்திரத்திரத்தில் (EVM Machine) வாக்களிக்க அனுமதி கொடுப்பார். இப்போது, அந்த எந்திரத்துக்கு முன்பு நீங்கள் சென்ற பிறகு, தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரே இருக்கும் வாக்குச் சீட்டு பொத்தானை (Ballot Button) அழுத்த வேண்டும்.

இந்த பொத்தானை அழுத்திய பிறகு பீப் சத்தம் மற்றும் சிகப்பு விளக்கு எரியும். இப்படி நடந்தால், உங்களது வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இதை அடுத்து அருகில் இருக்கும் விவிபேட் எந்திரத்தின் (VVPAT Machine) திரையில், வாக்களித்த சின்னம், பெயர் அடங்கிய டெபாசிட் சிலிப் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகளுக்கு காண்பிக்கப் படும். இதை உறுதி செய்துவிட்டு, நீங்கள் அங்கிருந்து வெளியேறலாம்.

அப்படி இல்லையென்றால், தேர்தல் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் நோட்டோவுக்கு (NOTA) வாக்களிக்க விரும்பினால், ஈவிஎம் எந்திரத்திரத்தின் கடைசியில் இருக்கும் பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவுதான் உங்களது வாக்களிக்கும் செயல்முறை முடிந்துவிட்டது. வாக்குச்சாவடியை விட்டு வெளியே சென்றுவிடலாம்.

மேலும், வாக்குச்சாவடிக்கு ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் டிவைஸ்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து, அது வரவில்லை என்றாலும், பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தால், மேற்கூறிய இதர புகைப்பட சான்றிதழ்களை எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to vote Lok Sabha Election 2024 voter ID to polling booth rules step by step guide for new voters
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X