Home
News

IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? இனி சிரமமின்றி தட்கல் டிக்கெட் புக் செய்யலாம்..

வரும் ஜூலை 1, 2025 தேதி முதல் தட்கல் முறையில் டிக்கெட் (Tatkal Ticket) புக்கிங் செய்வதற்கு ஆதார் கார்டு (aadhaar card) அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்கு தான் அதிகம் கிடைப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இதைச் சரி செய்யும் வகையில் தான் பல புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.

அதன்படி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் தங்களது ஐஆர்சிடிசி (irctc) கணக்குடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்கள் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து கேஒய்சி முடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டிருக்கிறது.

IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

இனி இந்த விதிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். சரி இப்போது ஐஆர்சிடிசி கணக்குடன் எப்படி ஆதாரை இணைப்பது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள்:

வழிமுறை-1:முதலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்குச் சென்று லாகின் செய்யுங்கள்.

வழிமுறை-2: அடுத்து Profile பிரிவில் Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3: அதன்பின்னர் ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரை சரியாக உள்ளிடவும்.

வழிமுறை-4: இதை தொடர்ந்து Send OTP என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் ஓடிபி-ஐ உள்ளிட்டு
Verify OTP ஐ கிளிக் செய்ய வேண்டும் பின்னர் KYC விவரங்கள் சரிபார்க்கப்படும்.

வழிமுறை-5: அடுத்து Update என்பதை கிளிக் செய்தால் போதும். உங்களது ஆதார் கணக்கு ஐஆர்சிடிசி கணக்குடன்
இணைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை எப்படி அங்கீகரிப்பது?

வழிமுறை-1: ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் உங்களுடைய பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு லாகின் செய்யவும்.

வழிமுறை-2: அடுத்து My Account எனும் பிரிவில் Authenticate User என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை-3: அதன்பின்னர் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும். அதை தொடர்ந்து Verify Details என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4: இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.

வழிமுறை-5: உங்கள் மொபைல் போனுக்கு வந்த ஓடிபி-ஐ திரையில் உள்ளிட்டு Submit button கிளிக் செய்யவும். இதை தொடர்ந்து ஆதார் அமைப்பிடம் இருந்து உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும்.

வழிமுறை-6: குறிப்பாக சரிபார்ப்பு வெற்றி பெற்றால் திரையில் அதற்கான தகவல் காண்பிக்கப்படும் அல்லது MY ACCOUNT என்ற பிரிவில் Authentication status என்பதை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஒருவேளை ஆதார் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் அது திரையில் தெரியும். நீங்கள் சமர்ப்பித்த தகவல்களில் எதாவது தவறு இருக்கிறதா என்பதையும் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த தட்கல் டிக்கெட்டை நாம் அனைத்து நேரங்களிலும் முன்பதிவு செய்துவிட முடியாது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. நீங்கள் நாளை இரவு ரயில் பயணம் செய்ய வேண்டியிருந்தால் இன்று காலையே தட்கல் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம் ஒரு நாளுக்கு முன்பாகவே திறக்கிறது. அதாவது ஏசி பெட்டியில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்ய காலை 11 மணிக்கும் புக்கிங் வசதி திறந்திருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to verify Aadhaar for IRCTC Tatkal train ticket booking: Steps to follow before July 1, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X