Home
News

சத்தமின்றி புதிய அம்சத்தைக் கொண்டுவந்த WhatsApp.. இனி அந்த சிக்கல் இருக்காது.. உற்சாகத்தில் பயனர்கள்..

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

அதாவது வாட்ஸ்அப் செயலியில் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me என்பதை மட்டும் கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

சத்தமின்றி புதிய அம்சத்தைக் கொண்டுவந்த WhatsApp..

வாட்ஸ்அப் செயலியில் சில நேரங்களில் நாம் எழுத்துப் பிழையுடன் மெசேஜ் அனுப்பி விடுவோம் அல்லது பிரைவேட் சாட்டில் மெசேஜ் அனுப்புவதற்குப் பதிலாக குரூப்பில் அந்த மெசேஜை அனுப்பிவிடுவோம். இப்படித் தவறுதலாக மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு அதைக் கவனித்து உடனே அதை நீக்க முயற்சிப்போம்.

ஆனால் வாட்ஸ்அப் சாட்டில் நாம் தவறுதலாக அனுப்பிய மெசேஜை மொத்தமாக அழிக்க நினைத்து Delete for Everyone என கொடுப்பதற்குப் பதிலாக Delete for me என்பதைக் கொடுத்துவிட்டால், அந்த மெசேஜ் நமக்கு மட்டும் அழிந்துவிடும் . மறு முனையில் உங்களது மேசேஜை பெற்றவர் அதனை எளிமையாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமின்றி புதிய அம்சத்தைக் கொண்டுவந்த WhatsApp..

இனி நீங்கள் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me என்று கொடுத்துவிட்டால் கவலைப்படத் தேவை இல்லை. அதாவது நீங்கள் Delete for Everyone என்பதற்குப் பதிலாக Delete for me கொடுத்துவிட்டால் அதை உடனே Undo செய்து கொள்ளும் வசதி தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நீங்கள் டெலிட் ஃபார் மீ (Delete for me) என்று கொடுத்துவிட்டால் அடுத்த 5 வினாடி வரை அன்டூ (Undo) பாப் அப்பில் தெரியும். அந்த 5 வினாடிக்குள் அன்டூ (Undo) செய்துவிட்டால் அந்த மெசேஜை நாம் சாட் பாக்ஸில் திரும்பப் பெறலாம். உடனே டெலிட் எவ்ரி ஓன் ( Delete for Everyone ) மூலம் யாரும் பார்க்காத வகையில் எளிமையாக நீக்கியும் விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச யுபிஐ பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமீபத்தில் ஆன்லைனில் வெளியானது.

சத்தமின்றி புதிய அம்சத்தைக் கொண்டுவந்த WhatsApp..

குறிப்பாக அந்த ஸ்கிரீன்ஷாட்-இல் புதிய வசதியானது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக நீங்கள் இந்த விருப்பத்தை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷன் என்பதை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பின்பு எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு தான் வாட்ஸ்அப் செயலியில் யுபிஐ பேமண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிகமான வங்கிகளைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த வாட்ஸ்அப்பில் சர்வதேச யுபிஐ பேமண்ட் மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புதிய வசதி விரைவில் அனைவருக்கும் கிடைத்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.

Photo courtcy: beebom.com

More from GizBot

Best Mobiles in India

English summary
How to use Undo Delete for me feature in WhatsApp? Here is the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X