Home
News

ச்ச! இந்த ட்ரிக் தெரியாமலா Smartphone-ஐ இத்தனை வருஷமா யூஸ் பண்றோம்! ஓ மை காட்.!

ஸ்மார்ட் போன் இருக்கும் பல அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு ஆர்வம் அதிகம். நமக்கு தெரியாத பல அம்சங்களும் ட்ரிக்ஸ்களும் (Tricks) நம்முடைய ஸ்மார்ட்போன்களில் நிறையப் புதைந்து கிடைக்கின்றது. இப்படிபட்ட அம்சங்கள் கூட ஸ்மார்ட்போன்களில் உள்ளதா? என்று வியப்படைப் போகிறீர்கள்.

ஸ்மார்ட்போன்களில் புதைந்து கிடக்கும் பல வியக்க வைக்கும் சிம்பிள் ட்ரிக்கை தான் இங்கு பார்க்கப்போகிறோம். இதுவரை இது தெரியாமல் போய்விட்டதே என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும் மூன்று சூப்பர் ட்ரிக்ஸ்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த ட்ரிக்ஸ்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை இன்னும் எளிமையாக்கும்.

ச்ச! இந்த ட்ரிக் தெரியாமலா Smartphone-ஐ இத்தனை வருஷமா யூஸ் பண்றோம்!

1. பேக்ஸ்பேஸ் ட்ரிக் (Backspace Trick)

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப், மெஸ்ஸேஜ் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி செய்திகள் அனுப்புவது அதிகரித்துவிட்டது. அழைப்புகள் மூலம் ஏற்படுத்தும் உரையாடல்கள் குறைந்து SMS உரையாடல்கள் அதிகரித்துவிட்டது. அப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெஸ்ஸேஜிங் செயலிகளில் செய்திகளை டைப் செய்யும் போது சில சமயங்களில் தவறுதலாக வார்த்தைகளை டைப் செய்ய நேரலாம்.

பொதுவாக தவறாக்க டைப் செய்யும்போது அதனை டெலீட் (Delete) செய்ய, பேக்ஸ்பேஸ் பட்டனை பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் பேக்ஸ்பேஸ் தேர்வானது எப்போதும் ஒரு ஒரு எழுத்தாகத் தான் டெலீட் செய்யும். இது பல சமயங்களில் நமது பொறுமையைச் சோதிக்கும். இதற்கான ஒரு தீர்வு தான் இந்த பேக்ஸ்பேஸ் ட்ரிக். உங்கள் கீபோர்டில் (Keyboard) இருக்கும் பேக்ஸ்பேஸ் பட்டனை சிங்கிள் டாப் (Single Tap) செய்தால் ஒவ்வொரு எழுத்தாக டெலீட்டாகும்.

ச்ச! இந்த ட்ரிக் தெரியாமலா Smartphone-ஐ இத்தனை வருஷமா யூஸ் பண்றோம்!

அதுவே லாங் டாப் (Long Tap) செய்யும்போது ஒவ்வொரு எழுத்தும் வேகமாக டெலீட் ஆகும். ஆனால் டெலீட் செய்ய வேண்டிய வார்த்தைகள் மொத்தத்தையும் ஒரே முறையாகத் தேர்வு செய்து டெலீட் செய்யும் ஒரு அம்சம் நம் போன்களிலேயே இருக்கிறது. பேக்ஸ்பேஸ் பட்டனை லேசாக லாங் டாப் செய்து அதனை இடது புறத்தை நோக்கி ஸ்லைட் (Slide) செய்யும்போது, வார்த்தைகளில் டெலீட் செய்ய வேண்டியவற்றைத் தேர்வு செய்ய முடியும்.

பேக்ஸ்பேஸ் பட்டனை ரிலீஸ் செய்யும்போது தேர்வான வார்த்தைகள் டெலீட் செய்யப்பட்டுவிடும். இது ஈஸி டெலீட் அம்சமாகும்.

2. ஒன் ஹான்ட் ட்ரிக் (One hand trick)

ஸ்மார்ட் போன்களின் வரவு ஆரம்பித்த போதிலிருந்த அளவை விட சமீபகாலமாக வரும் போன்கள் அதிக பரப்பளவுடன் வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும் போனிலேயே செய்து முடித்துவிடுவதால், பெரிய டிஸ்பிளே மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்றே செல்லலாம். ஆனால், இப்படி போன்களின் டிஸ்பிளே அளவு அதிகரிக்கும் போது அதனை கைகளில் வைத்து பயன்படுத்துவது கடினமாகிவிடுகிறது.

இரண்டு கைகளையும் பயன்படுத்தினால் மட்டுமே போன்களை பயன்படுத்த முடிகிறது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது இந்த பெரிய திரை போன்களை கையாள்வதும், பயன்படுத்தும் மிகவும் கடினமாக உள்ளது. பயணிப்பவர்களுக்கும் அது ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கான தீர்வு தான் ஒன் ஹான்ட் அம்சம். உங்கள் ஸ்மார்ட் போனின் செட்டிங்க்ஸில் இருக்கும் ஒன் ஹான்ட் மோடை (One hand mode) ஆன் செய்து வைத்தால் உங்கள் போனின் டிஸ்பிளே சுருங்கிவிடும்.

ச்ச! இந்த ட்ரிக் தெரியாமலா Smartphone-ஐ இத்தனை வருஷமா யூஸ் பண்றோம்!

போனின் டிஸ்பிளேயானது கைகளுக்கு அடக்கமான அளவிற்குச் சுருங்கிவிடும். சில போன்களில் கீ போர்டுகள் மட்டும் சிறிய அளவில் ஒரு கையை பயன்படுத்துவதற்கு வசதியாக மாறிக்கொள்ளும். சில போன்கள் ஸ்க்ரீனை கீழே ஸ்வைப் (Swipe) செய்யும்போது, ஸ்க்ரீன் சிறியதாக மாறிக்கொள்ளும். இந்த தேர்வை பயன்படுத்தி ஒரே கைகளில் போனை கையாண்டு மறுகைகளில் மற்ற வேலைகளை செய்யலாம்.

3. கூகுள் மேப் ட்ரிக் (Google Map trick)

பொதுவாக ஸ்மார்ட் போன்களில் மேப்பை பயன்படுத்தும்போது அதனை சூம் இன் (Zoom in) செய்ய ஸ்க்ரீனை டபுள் டாப் (Double Tap) செய்வோம். சூம் அவுட் (Zoom out) செய்ய பேக் பட்டனை (Back Button) பயன்படுத்துவது வழக்கம். இந்த ட்ரிக்கை பயன்படுத்தி இந்த சூம் இன், சூம் அவுட்டை மிகவும் சுலபமாக செய்துகொள்ள முடியும்.

கூகுள் மேப்பை ஓப்பன் செய்து திரையை டபுள் டாப் செய்து அப்படியே திரையை மேலே ஸ்வைப் செய்து கொண்டு சென்றால் சூம் அவுட் ஆகும். அதுவே திரையை டபுள் டாப் செய்து அப்படியே திரையை கீழே ஸ்வைப் செய்து கொண்டுசென்றால் சூம் இன் ஆகும். ஒரே செயல்பாட்டைப் பயன்படுத்தி மேப்பை சூம் இன் மற்றும் சூம் அவுட் செய்வது கூகுள் மேப் பயன்பாட்டை மிகவும் சுலபமாக்கும்.

இந்த ட்ரிக்ஸ்களை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் (smartphone) ட்ரை செய்து பாருங்கள்.!

More from GizBot

Best Mobiles in India

English summary
How to use this 3 gesture controls in your smartphone for easy usage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X