Home
News

இனி பயமே வேண்டாம்! WhatsApp சாட்டை தனி-தனியாக லாக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சூப்பரான ஒரு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புது அம்சத்தின் மூலம் இனி பயனர்கள் தனி-தனி சாட்டை லாக் செய்துகொள்ளலாம். இந்த அம்சம் "சாட் லாக் (Chat Lock)" என்று அழைக்கப்படுகிறது. இது எப்படி செயல்படுமென்று பார்க்கலாம் வாங்க.

WhatsApp உருவாகியுள்ள புதிய "சாட் லாக் (Chat Lock)" அம்சத்தை எதிர்பார்த்து தான் வாட்ஸ்அப் பயனர்கள் பல காலமாக காத்திருக்கின்றனர். ஒரு வழியாக, நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாட் லாக் அம்சம், உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்களை மட்டும் சாட் பாக்சில் இருந்து லாக் செய்துகொள்ள அனுமதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி பயமே வேண்டாம்! WhatsApp சாட்டை தனி-தனியாக லாக் செய்யலாம்!

ஆம், சரியாக தான் படித்தீர்கள். இனி வாட்ஸ்அப் சாட்டில் மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களின் உதவி எதுவுமின்றி, உங்கள் WhatsApp சாட் பாக்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாட்டை மட்டும் உங்களால் இனி லாக் செய்து வைத்துக்கொள்ள முடியும். இது வாட்ஸ்அப் ஆப்ஸிற்குள் நுழையும் போது கேட்கப்படும் லாக் அம்சம் போன்றதல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனி-தனி சாட்களை பிரைவசி காரணத்திற்காவோ அல்லது பாதகாப்பு நலன் கருதியோ இனி நீங்கள் லாக் செய்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப் தளத்தில் பிரைவசி அம்சத்தை பலப்படுத்த WhatsApp நீண்ட காலமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில், நிறுவனம் இதற்கு முன் பல பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் பயனர்களின் பெர்சனல் சாட்களை, சாட் பாக்சில் இருந்து மறைக்க அனுமதிப்பது மட்டுமின்றி லாக் செய்யவும் அனுமதிக்கிறது. புதிய சாட் லாக் அம்சத்தின் மூலம் இனி பயனர்கள் குறிப்பிட்ட சாட்களை ஹைடு செய்து கொள்ளலாம்.

அதேவேளையில், நீங்கள் லாக் செய்யும் சாட்களுக்கு பாஸ்வோர்ட் அல்லது பயோமெட்ரிக் லாக் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது. இது உங்கள் வாட்ஸ்அப் சாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. லாக் செய்யப்பட்ட சாட்களின் நோட்டிபிகேஷன் கூட உங்கள் போனில் காண்பிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. லாக் செய்யப்பட்ட சாட்டை அணுக பயனர்கள் WhatsApp சாட் பாக்ஸ் ஏரியாவில் மேல் இருந்து கீழ் நோக்கி இழுக்க வேண்டும்.

இனி பயமே வேண்டாம்! WhatsApp சாட்டை தனி-தனியாக லாக் செய்யலாம்!

இன்ஸ்டாகிராமில் ரெஃப்ரஷ் செய்வது போல் இழுக்கும் பொழுது, வாட்ஸ்அப் லாக் செய்யப்பட்டு ஹைடு செய்து வைத்துள்ள சாட்களை காண்பிக்க பிங்கர் பிரிண்ட் அல்லது பாஸ்வோர்டை உள்ளிடும் படி கேட்கும். உரிய பாஸ்வோர்ட் அல்லது பிங்கர் பிரிண்ட் வழங்கிய பிறகு, லாக் செய்யப்பட்ட சாட்கள் மற்றும் அதில் வந்துள்ள மெசேஜ்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். இந்த அம்சம் உண்மையிலேயே அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

இனி உங்கள் போனை, மற்றவர்களிடம் அல்லது குடும்பத்தினரிடம் தயங்கி வழங்க வேண்டியதில்லை. நீங்கள் மறைக்க விரும்பும் சாட்களை இனி எளிதில் பாஸ்வோர்ட் லாக் செய்து பாதுகாத்துக்கொள்ளலாம், இந்த அம்சத்துடன், WhatsApp நிறுவனம் இன்னும் பல லாக்கிங் அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. வரும் காலத்தில், சாட்டிற்கும் பிரத்தியேகமான பயனர் விரும்பும் பாஸ்வோர்ட்களை உள்ளிடவும் வாட்ஸ்அப் அனுமதிக்கும் என்று கூறியுள்ளது.

இப்போதுள்ள சாட் லாக் அம்சம், உங்கள் பிங்கர் பிரிண்ட் மற்றும் போன் பாஸ்வோர்ட் உடன் இணக்கமானது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அம்சம் இப்போது ஒரு பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. இது விரைவில் அணைத்து பயனர்களுக்கு கிடைக்கவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to use the new chat lock feature in WhatsApp
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X