அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
கூகுள் இமேஜ் ஆப்ஷன் வழிமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டை கூகுள் தேடுதலத்தின் எப்படி உபயோகித்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

இணையத்தையும் கூகுளையும் பிரிக்க முடியாது
இணையத்தையும் கூகுளையும் பிரிக்க முடியாத அளவு கூகுள் பயன்பாடு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேடுப்பொறி தொழில்நுட்பமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான்
ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது.

டைப் செய்து தேடி விடலாம்
கூகுளில் ஏதாவது தேட வேண்டும் என்றால் அந்த வார்த்தையை டைப் செய்து தேடி விடலாம். இதுவே நமக்கு ஒரு விலங்கின் உருவம் அதன் படம் மட்டும் உள்ளது அது என்ன என்று தெரிய வேண்டும் என்றால் அதை எப்படி தேடுவது என சந்தேகம் இருக்கலாம்.

புகைப்படங்களை வைத்து தேடவேண்டுமா
ஒருசில வார்த்தைகளை தேடவேண்டும் என்றால் அதன் சில எழுத்துகளை டைப் செய்தால் போதும் கூகுள் நம் தேடல் பரிந்துரைகளை எடுத்துக் காட்டி உதவும். அதுவே நமக்கு ஒருசிலவற்றின் புகைப்படங்கள் இருந்து அதுகுறித்து தெரிய வேண்டும் என்றால் அதை வைத்து எப்படி தேடி கண்டு படிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ரிவர்ஸ் இமேஜ் என்ற தேடல்
இதற்கு கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் என்ற தேடல் வழிமுறைகள் உள்ளது. இந்த பயன்பாடு உதவும் என தெரிவிக்கப்படுகிறது. ரிவர்ஸ் இமேஜ் ஆப்ஷனை விளக்கி அதை வைத்து எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்
ஸ்டெப் 1:
வழக்கம் போல் கூகுள் தேடுதலத்தை ஓபன் செய்து வைத்துக் கொள்ளவும். கூகுள் தேடலுக்குள் நுழைந்ததும், அதன் மேலே வலது புறத்தில் இமேஜஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும்

இரண்டாவது வழிமுறை
ஸ்டெப் 2:
இதை கிளிக் செய்தவுடன் கூகுள் ரிஃப்ரஸ் ஆகி மீண்டும் ஓபன் ஆகும். அப்போது கூகுள் தேடுதலத்தில் டைப் செய்யும் இடத்தில் கேமரா இமேஜ் காட்டும், அதை கிளிக் செய்யவும்.

மூன்றாவது வழிமுறை
ஸ்டெப் 3:
அதன்படி காட்டப்படும் மெனு பட்டனில் இமேஜ் அப்லோட், இமேஜ் யுஆர்எல் என காட்டப்படும். இதன்மூலம் இமேஜ் அப்லோட் செய்யலாம்.

நான்காவது வழிமுறை
ஸ்டெப் 4:
இந்த இமேஜ் அப்லோட் செய்த உடன் இமேஜ் குறித்த விவரங்கள் காட்டப்படும் அதாவது இமேஜ் சைஸ், அதன் விவரம் காட்டப்படும் அதோடு மட்டுமின்றி இமேஜ்-ல் காட்டப்படும் காட்சி அதாவது மிருகங்கள் குறித்த விவரங்கள் குறித்தும் விளக்கம் தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் பயன்படலாம்
இது விண்டோஸ் மட்டுமல்ல மொபைல் போனுக்கும் பொருந்தும். இந்த வழிமுறைகள் மூலம் கூகுள் தேடலில் தங்களுக்கு தேவையானவையை அறிந்து கொண்டு பயன்படலாம்.


Click it and Unblock the Notifications