ChatGPT-ஐ எப்படி மொபைல் மற்றும் லேப்டாப்பில் பயன்படுத்துவது? 2 நிமிடம் போதும் நீங்க ப்ரோ ஆக.!
சமீபகாலமாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒன்று சாட்ஜிபிடி (ChatGPT). சாட் ஜிபிடி என்பதன் விரிவாக்கம் சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெயின்ட் டிரான்ஸ்ஃபார்மர் (Chat Generative Pre-Trained Transformer) என்பதாகும்.
இந்த சாட் ஜிபிடி-யானது கூகுளின் பார்டிற்கு (Google's Bard) போட்டியாக களம் இறங்க உள்ளதாகப் பேசப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவை (San Francisco) சேர்ந்த ஓப்பன்ஏஐ (OpenAI) என்ற நிறுவனம் இந்த சாட்ஜிபிடியை உருவாக்கி வருகிறது. இதனை சாட்பாட் (ChatBot) என்று கூறுவர். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மூலம் நாம் கேட்கும் கேள்விகளுக்கும், தரும் கட்டளைகளுக்கும் இந்த சாட்ஜிபிடி பதில் அளிக்கும், கட்டளைகளையும் நிறைவேற்றும்.

ChatGPT ஏன் சிறந்தது? மற்ற AI-க்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
இது போன்ற பல AI தளங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அப்படியிருக்கும் போது சாட்ஜிபிடியில் என்ன தனித்துவம் உண்டு என்று நீங்கள் யோசித்தால், இந்த சாட்ஜிபிடி ஒரு மனிதன் உங்களுடன் பேசுவது போன்ற உரையாடலை நிகழ்த்தவல்லது. அறிவுப்பூர்வமான ஒரு மனிதருடன் வரலாறு, தத்துவம், கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி நீங்கள் உரையாடும் பொழுது, உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம் சாட்ஜிபிடியுடன் உரையாடும்பொழுது கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, உங்களது பாடலுக்கு வரிகள் எழுதுவது, மெயில் (Mail) எழுதுவது, கோடிங் (Coding) எழுத, கவிதைகள் எழுத என்று அனைத்து தேவைகளுக்கும் சாட்ஜிபிடியை நீங்கள் பயன்படுத்த முடியும். இவ்வளவு திறமைகள் கொண்ட சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி? வாங்கப் பார்க்கலாம்.
இந்த சாட்ஜிபிடியை பயன்படுத்த முதலில் https://chat.openai.com/auth/login என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி லாகின் (Login) செய்து கொள்ள வேண்டும். சாட்ஜிபிடியானது இன்னும் சோதனை நிலையில்தான் உள்ளது. முழுமையாக இன்னும் பயன்பாட்டிற்கு வெளியிடப்படவில்லை. சாட்ஜிபிடி இன்னும் செயலியாகவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே தற்போதைய நிலையில் இந்த சாட்ஜிபிடி பயன்படுத்த ஓபன்எஐ தளத்தில் தான் சென்று லாகின் செய்ய முடியும்.

ChatGPT-ஐ எப்படி மொபைல், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் பயன்படுத்துவது?
உங்களிடம் கணக்கு இல்லாத பட்சத்தில் நீங்கள் சைன்அப் (Signup) செய்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அல்லது உங்கள் மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் கூகுள் கணக்குகள் மூலமும் லாகின் செய்து கொள்ளலாம். உங்கள் இமெயில் ஐடி (emailID) மற்றும் மொபைல் எண்ணை செலுத்தி நீங்கள் சைன்அப் செய்த பின்னர், நீங்கள் கொடுத்த இமெயில் ஐடியை வெரிஃபை (Verify) செய்து கொள்ள உங்களுக்கு நோட்டிபிகேஷன் (Notification) அனுப்பப்படும்.
அதேபோல உங்கள் மொபைல் எண்ணிற்கு வெரிஃபிகேஷன் கோட் (Verification Code) வாட்ஸாப்பில் அனுப்பப்படும். இந்த வெரிஃபிகேஷன் முடிந்த பிறகு வரும் பக்கத்தில் உங்களது முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை நீங்கள் டைப் செய்ய வேண்டும். அவ்வளவுதான் இனி நீங்கள் இலவசமாக சாட்ஜிபிடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம். சாட்ஜிபிடியை பயன்படுத்துவது மிகவும் சுலபமான முறையாகும். குழந்தைகள் முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் தான் இந்த சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டுள்ளது.

ChatGPT அக்கௌன்ட் உருவாக்கிய பிறகு நீங்கள் செய்ய வேண்டியது இதை தான்.!
- https://chat.openai.com/auth/login -யில் லாகின் செய்தவுடன், சாட்ஜிபிடியின் பக்கத்திற்குச் செல்ல முடியும்.
- சாட்ஜிபிடி பக்கத்திலிருக்கும் சர்ச் பாரில் (Search Bar) உங்களது கேள்விகளை கட்டளைகளாக எழுதி அனுப்பினால் அதற்கான பதிலை சாட்ஜிபிடி உங்களுக்கு அனுப்பும்.
- உதாரணமாக "Write a Leave Letter" என்று நீங்கள் டைப் செய்து அனுப்பினால், சாட்ஜிபிடி தரமான லீவ் லெட்டர் ஒன்றை டைப் செய்து அனுப்பும்.
- அதனை நீங்கள் காப்பி செய்து, அதில் உங்கள் பெயர் முகவரி ஆகியவற்றை நிரப்பிப் பயன்படுத்தலாம்.
- தொழில் ரீதியான வேலைகளுக்காக மட்டுமின்றி, தனிப்பட்ட தேவைகளுக்கும் சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம்.
- நீங்கள் யாருக்காவது பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது உங்கள் காதலன் அல்லது காதலிக்கு கவிதை சொல்லி அவர்களது மனதை கவர நினைத்தாலோ சாட்ஜிபிடி உங்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.
- இதில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் கட்டளைகளை அனுப்பலாம்.
- ஒரு காதல் கவிதை எழுதவும் என்று டைப் செய்து அனுப்பினால், சாட்ஜிபிடி ஒரு நல்ல காதல் கவிதையைத் தமிழில் உங்களுக்கு அனுப்பும்.
- அது மட்டுமின்றி பள்ளி மாணவர்கள் தங்களது கேள்விகளை சாட்ஜிபிடியில் கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளலாம்.
- சமையல் பழகுபவர்கள் நீங்கள் சமைக்க விருப்பப்படும் உணவின் ரெசிபியையும் (Recipe) சாட்ஜிபிடி மூலம் பெற முடியும்.
மொபைல் போனில் ChatGPT பயன்படுத்த முடியுமா?
இந்த சாட்ஜிபிடி தற்போது இணையதள வடிவத்தில் மட்டுமே பயன்பாட்டிற்கு உள்ளது. டவுன்லோட் (Download) செய்து பயன்படுத்தும் செயலியாக இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. உங்களது ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், உங்கள் போனில் இருக்கும் ப்ரவுசரில் (Browser) ஓபன்ஏஐ இணையதளத்திற்குச் சென்று இலவசமாகப் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








