Home
News

அட்ராசக்கை.! இனி Ola-வில் இந்த சேவை குறுகிய காலத்திற்கு இலவசம்.. பைக் ரைடு மட்டுமில்லை இனி டெலிவரியும் உண்டு..

இனி ஓலா (Ola) பயனர்கள், டாக்ஸி மற்றும் பைக் ரைட்டு மட்டுமில்லாமல் இனி டெலிவரி ரைடிற்காகவும் இந்திய பயனர்கள் புக்கிங் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஓலா நிறுவனம் இந்தியாவில் புதிதாக டெலிவரி ரைடு சேவையை அறிவித்துள்ளது.

டெலிவரி ரைடு என்பது, ஸ்விக்கி ஜெனி (Swiggy Genie) மற்றும் டான்ஸோ டெலிவரி சர்வீஸ் (Dunzo delivery service) போன்ற சேவையாகும். உங்களுடைய ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப உதவும் சேவை இதுவாகும். ரைடு-பகிர்வு தளமான ஓலா இந்தியாவில் இப்போது இத்தகைய சேவையை ஓலா பார்சல் (Ola parcel service) சேவை என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அட்ராசக்கை.! இனி Ola-வில் இந்த சேவை குறுகிய காலத்திற்கு இலவசம்..

இது Swiggy Genie போன்ற டெலிவரி சேவையாகும். இந்த சேவையைப் பெறும் முதல் நகரமாக பெங்களூருவுடன் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஓலாவின் கூற்றுப்படி, இந்த சேவை பயனர்களுக்கு செலவு குறைந்த மற்றும் எளிதில் அணுகக்கூடிய டெலிவரி தீர்வை வழங்கும். வரும் நாட்களில் இந்த சேவை பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவின் பல முக்கியமான நகரங்களிலும் தொடங்கப்படவுள்ளது.

சரி, இப்போது இந்த சேவை எப்படி செயல்படும். இதற்கான கட்டண முறைகளை நிறுவனம் எவ்வளவு என்று நிர்ணயம் செய்துள்ளது என்று பார்க்கலாம். ஓலா பார்சல் டெலிவரி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக Ola CEO பவிஷ் அகர்வால் டிவிட்டர் மூலம் பதிவை பகிர்ந்துள்ளார். ஓலா பார்சலின் விலை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது 10 கிலோமீட்டருக்கு ரூ.50 வசூலிக்கும்.

அதேநேரத்தில், 15 கிலோமீட்டருக்கு ரூ.75 என்றும், 20 கிலோமீட்டருக்கு ரூ.100 என கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள பயனர்களுக்கு ஓலா பார்சல் சேவை இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பிளாட்ஃபார்ம் ஒரு வசதியான கட்டணமாக ரூ.1 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது.

அட்ராசக்கை.! இனி Ola-வில் இந்த சேவை குறுகிய காலத்திற்கு இலவசம்..

இதற்குப் பிறகு, மேலே குறிப்பிட்டுள்ள விலைக்கு ஏற்ப பயனர்களுக்கு சேவை பில் செய்யத் தொடங்கும். டெலிவரிக்கு தகுதியான பார்சல்கள் 15 கிலோகிராம் அல்லது அதற்கும் குறைவான எடையுடன் இருக்க வேண்டும். ஓலா டெலிவரி பார்ட்னரின் பேக் பேக்கிற்குள் பொருத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஓலா பார்சல் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?
ஓலா பார்சலை முன்பதிவு செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஓலா பயன்பாட்டைத் திறந்து, ஓலா பார்சல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் இலக்கை உள்ளிடவும்.
உங்கள் லொகேஷனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, பேக்கேஜை எடுப்பார்கள் நேரில் வருவார்கள்.
ஓட்டுநர் வந்ததும், உங்கள் OTP குறியீட்டை அவர்களுடன் பகிர்ந்து, உங்கள் பொருளை அவர்களின் வாகனத்தில் வைக்கவும்.
ஓட்டுநர் டெலிவரி இலக்கை அடைந்ததும், உங்களுக்கு அழைப்பு வரும்.

தெரியாதவர்களுக்கு, இந்த கான்செப்ட் Swiggy Genie, Uber Connect மற்றும் Dunzo போன்ற சேவைகளைப் போன்றது. அங்கு ஒரு டெலிவரி பார்ட்னர் ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து சேகரித்து மற்றொரு இடத்திற்கு பெயரளவிலான கட்டணத்தில் எடுத்துச் செல்கிறார். ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அதன் பார்சல் டெலிவரி சேவைகளுக்கு பயன்படுத்துவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சேவை தமிழகம் மற்றும் அதன் நகரங்களில் துவங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How To Use Ola Parcel Service Launched In India Check The Price Details Per 5Km
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X