Google Maps இப்படி யூஸ் செஞ்சா பெட்ரோல் டீசல் செலவை குறைக்கலாம்.. புது அப்டேட்டை எப்படி யூஸ் செய்வது?
இன்று பெரும்பாளான வாகன ஓட்டிகள் சுலபமாக புதிய இடங்களுக்கு பயணம் செய்ய உதவியாக இருக்கும் ஒரு செயலி என்றால் அது கூகுள் மேப் (Google Maps) தான். கூகுளின் இந்த புகழ் பெற்ற செயலிக்கு அறுமையான அப்டேட் (Update) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஒரு ஸ்மார்ட்போனை (Smartphone) வைத்து ஓராயிரம் செயல்பாடுகளை செய்துகொள்ள முடியும். ஒவ்வொரு தேவைக்கும் பிரத்தியேக மொபைல் ஆப்ஸ் (Mobile Apps) உருவக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆப்ஸ்களை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு அவ்வபோது அப்டேட் செய்வது வழக்கம். அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலிக்கு புதிய அப்டேட் (Google Maps New Update) ஒன்றை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் செலவை குறைக்க போகும் கூகுள் மேப்ஸ் புது அப்டேட் (Google Maps new update that will reduce the cost of petrol and diesel):
மக்கள் அதிகம் பயன்படுத்து செயலிகளின் லிஸ்டை எடுத்து பார்த்தால் அதில் கூகுள் மேப்பிற்கு (Google Maps App) ஒரு இடம் கட்டாயம் இருக்கும். ஒரு இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல வழி காட்டுவது மட்டுமின்றி இலக்கை சீக்கிரம் அடைய ஏற்ற வழி (Shortest routes) எது, எந்த வழியில் ட்ராஃபிக் (Traffic Routes) அதிகமாக உள்ளது போன்ற விபரங்களையும் மேப்பில் பெற முடியும்.
கார் (Car), பைக் (Bike) போன்ற தனிப்பட்ட வாகனங்கள் மட்டுமின்றி அரசு வாகனங்களான பஸ் (Bus), மின்சார ரயில் (Electric Train), மெட்ரோ ரயில் (Metro Train) போன்றவற்றில் பயணம் செய்வதற்கான வழிகாட்டியாக இருந்து மக்களுக்கு பெரும் உதவியை செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக புதிய அப்டேட் ஒன்றை கூகுள் (Google) அறிமுகம் செய்துள்ளது. அது தான் ஈக்கோ ஃப்ரென்ட்லி ரூட்டிங் (Eco-Friendly Routing).
கூகுள் மேப்ஸ் ஈக்கோ ஃப்ரென்ட்லி ரூட்டிங் (Google Maps Eco-Friendly Routing):
பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான பிரச்சனையாக இருப்பது எரிபொருள் பயன்பாடுதான் (Fuel Consumption). இன்றைய விலைவாசி ஏற்றத்தில் 103 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் (Petrol price), அது ஒரு நாள் தாண்டுவதே பெரிய விஷயம். இப்படி இன்று மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் எரிபொருள் சிக்கனத்தை (Fuel economy) கருத்தில் கொண்டு இந்த புதிய அப்டேட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
இதில் குறைந்த தூரம் (Distance), ட்ராஃபிக் (Traffic) போன்றவற்றுடன் சேர்த்து குறைந்த எரிபொருள் பயன்பாடு இருக்கும் வழியையும் (Fuel economy routes on Google Maps) கூகுள் மேப் காட்டுமாம். ஒரு சில வழிகளில் மேலே கூறிய மூன்று அம்சங்களும் இருக்கலாம். சில வழிகள் குறைந்த தூரமாக இருக்கும், ஆனால் எரிபொருள் அதிகம் செலவாகலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் இரண்டு தேர்வுகளை காட்டும். வாகன ஓட்டி தனக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்கள் வாகனத்தின் என்ஜின் டைப் என்னது? (What is the engine type of your vehicle):
இந்த ஈக்கோ ஃப்ரென்ட்லி ரூட்டை (Google Maps Eco-Friendly Routes) வாகனம் எந்த எரிபொருளில் இயங்குகிறது, என்ஜின் டைப் (Engine type) என்ன என்பதை பொருத்து மேப் வழங்கும். உதாரணமாக கார் என்ஜின்கள் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel), ஹைப்ரிட் (Hybrid), மின்சார வாகனம் (Electric Vehicle) என்று பல வகைகளில் இருக்கும். இதில் உங்களது வாகனம் என்ன ரகம் (Type of the vehicle) என்பதை தேர்வு செய்தால் அதற்கான சிறந்த ஈக்கோ ஃப்ரென்ட்லி ரூட்டை மேப் காட்டும்.
இந்த அப்டேட்டை குறிப்பிட சில நாடுகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய ரோட்களுக்கும் இந்த அப்டேட் வரவுள்ளது. இதன் மூலம் எரிபொருள் பயன்பாடு குறையும், பணம் மிச்சமாகும், சுற்றுசூழலில் வெளியிடப்படும் CO2 வாயுவின் (CO2 emission) அளவு குறையும். இதன்மூலம் மக்கள் மற்றும் இயற்கை இரண்டுக்கும் சாதகமான விளைவு கிடைக்கும் என்று கூகுள் தெரிவிக்கின்றது.
இந்த அம்சத்தை பயன்படுத்த கூகுள் மேப்ஸ் ஆப்பில் வலது மேல் ஓரத்தில் இருக்கும் ப்ரொஃபைல் போட்டோவை (Profile Photo) தேர்வு செய்யவும். அதில் செட்டிங்ஸ் (Settings) உள்ளே சென்று நாவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation settings) என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் வசிக்கும் பகுதியில் இந்த அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் ரூட் ஆப்ஷன்ஸ் (Route options) என்ற பகுதி காண்பிக்கப்படும்.
இதில் "ப்ரிஃபர் ஃப்யூயல் எஃப்ஃபிசியன்ட் ரூட்ஸ்" (Prefer fuel efficient routes) என்ற ஒரு தேர்வு இருக்கும். அதனை ஆன் செய்த பின்னர் உங்கள் வாகனத்தின் என்ஜின் டைப்பை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான். இனி சிக்கனமாக எரிபொருள் பயன்பாட்டுடன் வாகனத்தை பத்திரமாக ஓடுங்கள்.


Click it and Unblock the Notifications








