போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/how-to-use-new-get-directions-and-voice-service-features-on-google-maps-2.html">Next »</a></li></ul>
போக்குவரத்து நெரிசலை குறைக்க கூகுள் மேப்பில் புதிய வழி!

போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரத்தினை குரல் வழி சேவை மூலம் வழங்குகிறது கூகுள் மேப்ஸ்.

கூகுள் மேப்ஸ் ஊடுருவலை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரத்தினை முன்கூட்டியே அறியலாம். பயணங்களின் போது எந்த விதமான இடர்பாடுகளும் இல்லாமல், இடத்தினை வெகு சுலபமாக கண்டறிய கூகுள் மேப் பயன்பட்டு வருகிறது. பெங்களூர், மும்பை, பூனே, டெல்லி, சென்னை, ஹதிராபாத் போன்ற பெருநகரங்களில் இருந்தால் லைவ் ட்ராஃபிக் என்ற கூடுதல் வசதியினையும் எளிதாக கூகுள் மேப்பில் அப்டேட் செய்ய முடியும்.

கூகுள் மேப்பின் மூலம் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை குரல் வழி சேவையில் பெற முடியும். எந்த வழியாக சென்றால் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது என்பது பற்றிய தகவல்களை இந்த குரல் வழி சேவை வசதி மூலம் பெற முடியும்.

இந்த வசதி ஆன்ட்ராய்டு2.2 மற்றும் அதன் பிறகு வந்த இயங்குதளங்களிலும் எளிதாக பெற முடியும். இன்டர்நெட் கனக்டடு ஜிபிஎஸ் நேவிகேஷன் சேவையின் மூலம் வழங்கப்படும் இந்த வசதி இப்போதைக்கு ஆங்கில மொழிகளில் மட்டும் வழங்கப்படும். அதன் பின் மற்ற மொழிகளிலும் வழங்கப்படும்.

குரல் வழி சேவை போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை முன்னதாக கொடுத்து, கூகுள் மேப்ஸ் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் நம்மை சரியாக வழி நடத்தி செல்லும். இது போன்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த இடத்திற்கு செல்ல கால தாமதமாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.கூகுள் மேப்பின் இந்த புதிய குரல் வழி சேவை வசதி 40 மொழிகளிலும், 72 நாடுகளிலும் வழங்கப்படுகிறது.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/news/how-to-use-new-get-directions-and-voice-service-features-on-google-maps-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot