ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தும் புதிய வசதி.! இனி ஒரு குரல் கொடுத்தால் போதும்.! பயன்படுத்துவது எப்படி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, அது என்னவென்றால், உங்களது குரல் கட்டளைகள் மூலம் உங்கள் வங்கி வேலைகளை எளிதாக செய்ய முடியும். அதாவது உங்கள் வங்கி கணக்கில் இருப்பு சோதனை, கிரெடிட் கார்டு விவரஙகள் போன்ற தகவல்களுக்கு நீங்கள் குரல் எழுப்புவதன் மூலம்
தகவல்களை பெற முடியும். பின்பு உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை பெறுவீர்கள்.

இந்த புத்தம் புதிய வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வங்கி தனது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும்
மல்டி-சேனல் சாட்போட் ஐபலை அமேசான் அலெக்சா (Alexa) மற்றும் கூகிள் உதவியாளர் (Google Assistant)ஆகியோருடன் ஒருங்கிணைந்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் செய்து தகவல்களை வழங்கியுள்ளது, இதனுடன் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா லாக் டவுனில் வாடிக்கையாளர்களின் வசதிகளை மனதில் வைத்து நிறுவனம் இந்த சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது என்று வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி வசதி மூலம் தொலைபேசியை தொடாமல் பேசுவதன் மூலம் நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளை செய்ய முடிடியும். மேலும் வங்கியின் குரல் உதவியாளர்கள் அடிப்படையிலான சேவை 24மணி நேரமும் ஏழு நாட்களும்கிடைக்கும்.

பயன்படுத்துவது எப்படி?
இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த குரல் வங்கியனைப் பயன்படுத்த நீங்கள் அலெக்ஸா/கூகுள் உதவியாளரைப் பதிவிறக்கம்செய்து பாதுகாப்பான இரண்டு காரணி அங்கீகார செயல்முறை மூலம் அவற்றை உங்கள் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில இணைக்கவேண்டும், இதற்குப் பிறகு உங்கள் கேள்வியை அலெக்சா அல்லது கூகுள் உதவியாளரிடம் பேசலாம்.

உதரணமாக வாடிக்கையாளர்கள் அலெக்ஸாவிடம் அலெக்சா எனது கணக்கு இருப்பு என்ன? எனக் கேட்டால் இதன் பின்னர்ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையானர்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான முறையில் எஸ்எம்எஸ் வழியாக தகவல்களை அனுப்பும். இது தவிர வாடிக்கையாளர்கள் வங்கியின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான கேள்விகளையும் கேட்கலாம் என்பது குறப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications