இனி எளிதாக மறைக்கலாம்!

ஹைடு டேப் என்றால் என்ன? இந்த வசதியை எதற்காக பயன்படுத்துவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். என்ன தகவலை படிக்கிறோம் என்பதை, ஹைடுடேப் ஆப்ஷன் மூலம் எளிதாக மறைக்கலாம்.
ஃபையர்பாக்ஸ் வெப் பிரவுசரில் நிறைய தகவல்களை தேடும் போது விண்டோஸ் டேப் என்ற வசதி பயன்படுகிறது. இதனால் பல தகவல்கள் தேடும் போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்டோஸ் திறக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே விண்டோவில், வெவ்வேறு டேப்களை திறந்து கொள்ளலாம்.
எந்த தகவலை பார்த்து கொண்டிருக்கிறோம் என்பதை பிறருக்கு காட்ட விருப்பமில்லை என்றால் ஒரே ஒரு க்ளிக் செய்து, அந்த குறிப்பிட்ட டேபை மட்டும் மறைக்க முடியும். இதற்காக பயன்படுத்துவது தான் ஹைடுடேப் ஆப்ஷன். இந்த ஆப்ஷனை ஃபையர்ஃபாக்ஸில் எப்படி பெறலாம் என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஏட்-ஆன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஃபையர்பாக்ஸ் வெப் பிரவுசரை திறந்தவுடன், இடது பக்கம் மூலையில் தலை கீழான முக்கோணம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்தால் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, டவுன்லோட்ஸ் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் ஏட்-ஆன்ஸ் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு புதிய ஏட்-ஆன்ஸ் விண்டோ திறக்கப்படும். இதில் ஹைடுடேப் என்ற எக்டன்ஷன் வசதியை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.


இன்ஸ்டால் என்ற பட்டனை க்ளிக் செய்த பின்பு ரீஸ்டார்ட் என்ற பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சொடுக்க வேண்டும். அவ்வளவு தான் இந்த ஹைடு டேப் என்ற எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்துவிட்ட பிறகு, எந்த விண்டோ டேபில் வைத்து ரைட் க்ளிக் செய்தால், அதில் ஹைடுடேப் ஆப்ஷன் இருக்கும். இதை க்ளிக் செய்து, விண்டோடேபை எளிதாக (ஹைடு) செய்யலாம்.

அதன் பிறகு திறந்திருக்கும் அதோ ஒரு டேப் மேல் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். இதில் ஹைடு செய்யப்பட்ட டேப், ஆச்சர்ய குறியுடன் சுட்டிகாட்டப்பட்டிருக்கும். இதை பயன்படுத்தி எளிதாக ஹைடு செய்த டேபை மீண்டும் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு முக்கியமான தகவலை நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் அந்த தகவலை பற்றி தேவையில்லாமல் அலசி ஆராய்கிறார்கள் என்றால் இந்த ஹைடுடேப் வசதியை பயன்புடத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications