Home
News

Google Payவில் இந்த பிரச்சனை இருக்கிறதா? இனி சிரமம் இருக்காது.. அவசர கால நேரங்களில் இந்த UPI lite கைகொடுக்கும்

இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். அதாவது இந்த செயலிகள் மூலம் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் எந்த சிரமும் இல்லாமல் சில வினாடிகளில் அனுப்ப முடிகிறது. அதுவும் யாருக்குப் பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் வங்கி கணக்கு எண்கள் கூட தேவை இல்லை. வெறும் போன் நம்பர் மட்டும் போதும், அடுத்த சில வினாடிகளில் பணத்தை அக்கவுண்டில் இருந்து அனுப்பி விட முடியும்.

ஆனால் இந்த யுபிஐ செயலிகள் பரிவர்த்தனையை எளிதாக்கினாலும் கூட சில நேரங்களில் காலை வாரி விடுகிறது என்றே கூறலாம். அதாவது கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கிட்டு பணம் செலுத்தலாம் என்று QR codeஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் வங்கி சர்வர் பிரச்சனை காரணமாகப் பணம் செலுத்த முடியாமல் போகிறது.

Google Payவில் இந்த பிரச்சனை இருக்கிறதா? இனி சிரமம் இருக்காது..

குறிப்பாக யுபிஐ செயலிகள் ஒரு வங்கியில் இருந்து பணம் பெற்று மற்றொரு வங்கிக்கு மாற்றுகின்றன. இதனால் வங்கியின் சர்வர் சரியாக இயங்கவில்லை என்றால் அங்கு payment failure வருகிறது. எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவே UPI lite கூகுள் பேவில் அறிமுகம் செய்யப்பட்டது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் யுபிஐ லைட் ஆனது ஒரு வாலட் போன்று செயல்படும்.

அதவாது இந்த யுபிஐ லைட்-ல் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து ரீச் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக இதில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வங்கி சர்வர் சரியில்லை என்றாலும் இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கொள்ள முடியும். அதுவும் இந்த UPI lite வசதியில் அதிகபட்சமாக ரூ.2000 வரை ரீச் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு தடவைக்கு 2000 என ஒரு நாளைக்கு 4000 வரை உபயோகம் செய்து கொள்ள முடியும்.

மேலும் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் 500 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்டு பின் தர தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பணப் பரிமாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. குறிப்பாக இந்த யுபிஐ லைட் சேவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் பே செயலி ஆனது பல்வேறு அசத்தலான சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக இதில் அவ்வப்போது ரிவார்ட் (Reward) கேஸ்பேக் (cashback) போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இதுதவிர கூகுள் பே செயலியில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 9 லட்சம் வரை இதில் கடன் வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கப் பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூகுள் பே. இதன் மூலமாகக் கடன் பெறலாம்.

Google Payவில் இந்த பிரச்சனை இருக்கிறதா? இனி சிரமம் இருக்காது..

அதுவும் கூகுள் பே நேரடியாகக் கடன்களை வழங்காது. எனவே இதனால் வாடிக்கையாளர்கள் கடன் பெறும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போது கூகுள் பே பயன்படுத்தி கடன் பெறுவது எப்படி எனப் பார்க்கலாம். அதாவது கடன்பெற விருப்பம் உள்ள பயனர்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் கடன் (get loan) என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வருமானம் போன்ற அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதன்பின்பு கடன் விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, வருமானச் சான்று, வங்கி கணக்கு உள்ளிட்டவை கேட்கப்படும். இதன் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்து அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு கடன் ஒப்புதல் மற்றும் கடன் தொகையின் ரசீது பற்றிய விவரம் கிடைக்கும். குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம். அதுவும் மாதாந்திர தவணை ரூ.1000 முதல் துவங்குகிறது. ஆனால் கடன் பெறும் தொகையைப் பொறுத்து தவணை மாறுபடும்.

Best Mobiles in India

English summary
How to use Google Pay upi lite and what are its benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X