ஓப்ரா மினி வெப் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?

Posted By: Staff
ஓப்ரா மினி வெப் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி?
ஓப்ரா மினி என்ற பெயரை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசர் மிக பரிட்சயமான ஒன்று.

இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசரை அனைவரும் பல வசதிகளுக்காக பயன்படுத்தியிருப்போம். ஃபேஸ்புக்கில் சாட் செய்வதற்கும் இந்த ஓப்ரா மினி வெப் பிரவுசரை பயன்படுத்தலாம்.

அதுவும் மிக எளிதான வகையில். இதற்கு எந்த அப்ளிக்கேஷன் உதவியையும் நாட வேண்டியதுமில்லை, ஃபேஸ்புக் வலைத்தளத்தை தேட வேண்டியதுமில்லை.

நாம் டவுன்லோட் செய்திருக்க வேண்டியதெல்லாம் ஓப்ரா மினி வெப் பிரவுசரை மட்டும் தான். இந்த அப்ளிக்கேஷனை மொபைலில் டவுன்லோட் செய்து வைத்திருந்தால் போதும்.

இந்த ஓப்ரா மினி பிரவுசரின் அட்ரஸ் பாரில் https://touch.facebook.com/buddylist.php என்ற முகவரியை கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு திறக்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் யூசர்னேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

பிறகென்ன ஃபேஸ்புக் நண்பர்களை எளிதாக ஆன்லைனில் சந்திக்கலாம். ஓப்பரா மினி வெப் பிரவுசரில், ஃபேஸ்புக் பக்கத்தில் எளிதாக நுழைய இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வழி சிறந்தது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்